ஜுவல் சாங்கியில் ஏதாவது ஒரு கடையில் பொருள் வாங்கிய ரசீதை அதே நாளில் காண்பித்து கெனோபி பூங்கா, டிஸ்கவரி ஸ்லைட், மூடுபனி தோட்டங்கள், பெட்டல் தோட்டம் ஆகியவற்றுக்கு இருவர் இலவசமாகச் சென்று வரலாம். ஒரு நாளைக்கு 500 நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு.
கெனோபி பாலம், ஹெட்ஜ் புதர், கண்ணாடி புதர், ஆகாய வலை மற்றும் சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ ஆகியவற்றுக்குச் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும். இந்த மாதம் இறுதி வரை மட்டுமே அனுமதி இலவசம்.
(படம்: சாங்கி ஜுவல் ஃபேஸ்புக்)

