மலேசியாவிற்குள் நுழையும் குடிமக்கள் வீட்டில் தனிமையில் இருக்கு உத்தரவை நிறைவேற்ற இயலாது

மலேசியாவிற்குள் நுழையும் குடிமக்கள் வீட்டில் தனிமையில் இருக்கு உத்தரவை நிறைவேற்ற இயலாது

2 mins read
5c7176ba-ed43-4304-ac58-ea8d99e057d0
-

பிசிஏ எனப்படும் தவணை முறையிலான பயண ஏற்பாட்டின்கீழ் மலேசியாவுக்குள் நுழையும் பயணிகள் தற்போது நோய்ப்பரவல் காரணமாக வீட்டில் தனிமையில் இருக்க வேண்டியதற்குப் பதிலாக தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்களில் தடுத்து வைக்கப்படுவர். கொவிட்-19 நோய்த்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட அந்த மலேசியர் இந்த ஏற்பாட்டின்கீழ் தாயகம் திரும்பியதை அடுத்து இந்தப் புதிய விதிமுறை நடப்புக்குக் கொண்டுவரப்படுவதாக மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்பிய அந்த 35 வயது ஆடவருக்கு கொவிட்-19 இருந்ததாக இம்மாதம் 2ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தனிமையில் அந்த ஆடவர் சிகிச்சை பெறுவதாகக் கூறிய திரு பாபா, இனிமேல் பிசிஏ மூலமாக மலேசியாவுக்குத் திரும்புவோர் தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்களில் தங்க வைக்கப்படவேண்டும் என செய்தியாளர் கூட்டம் ஒன்றில் நேற்று தெரிவித்தார்.

ஹோட்டல்களிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படுபவர்கள், தங்களது செலவில்தான் அங்கு தங்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மலேசியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான நிலம்சார்ந்த எல்லைகளை திறக்கவேண்டும். 'ரெசிப்ரோகல் கிரீன் லேன்' (ஆர்ஜிஎல்) மற்றும் பிசிஏ திட்டங்களின் கீழ் இருநாட்டுப் பயணங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. முக்கியமான வர்த்தக அல்லது அதிகாரபூர்வ காரணங்களுக்காக 14 நாட்கள் வரை குறுகிய கால பயணம் செய்வதற்கு ஆர்ஜிஎல் வகை செய்கிறது. மலேசிய குடிமக்களையும் நிரந்தரவாசிகளையும் ஜோகூர் பாலத்தைத் தாண்டி மலேசியாவுக்குத் திரும்ப பிசிஏ அனுமதிக்கிறது.

முன்னைய பிசிஏ ஏற்பாட்டின்படி பயணிகள் ஏழு நாட்கள் நீடிக்கும் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றவேண்டும். ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று 'பிசிஏ'யும் 'ஆர்ஜிஎல்'லும் தொடங்கியது முதல் இதுவரை 3,000க்கும் அதிகமானோர் மலேசியா திரும்பியுள்ளனர்.

"கிட்டத்தட்ட 815 தனிநபர்கள் ஆர்ஜிஎல்லின் கீழ் மலேசியாவுக்குள் நுழைந்தனர். அத்துடன் 2,647 பேர் பிசிஏ திட்டத்தின்கீழ் நுழைந்தனர். இதுவரை ஆர்ஜிஎல்லின் கீழ் நுழைந்தவர் எவருக்கும் கிருமித்தொற்று இல்லை," என்று அவர் கூறினார்.