கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, ஒரு சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இச்சிறுவனின் மாமா, தொடர்ந்து கடுமையான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தினார். அப்போது அச்சிறுவனுக்கு ஐந்து முதல் ஆறு வயது இருக்கும்.
இந்தக் குற்றங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தன. அச்சிறுவன் பின்னர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்த குற்றத்துக்காக ஆலோசனைக்கு அனுப்பப்பட்டான். அப்போது, தான் பாலர்பள்ளி இரண்டாம் வகுப்பில் இருந்த போது தன் மாமா தன்னிடம் தவறாக நடந்துகொண்டது பற்றி பள்ளியின் ஆலோசகரிடம் மாணவர் தெரிவிக்க, அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார். அதன் பின்னர் போலிசில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.
இந்தக் கொடுமைகளைப் புரிந்த அந்த முன்னாள் தொழில்நுட்பரான 54 வயது ஆடவருக்கு நேற்று 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்பான மேலும் ஏழு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இப்போது 16 வயதாகும் அந்த இளையரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

