முன்னாள் பணிப்பெண் வழக்கில் கூடுதல் விசாரணைகள் நடத்தப்படலாம்

முன்னாள் பணிப்பெண் வழக்கில் கூடுதல் விசாரணைகள் நடத்தப்படலாம்

1 mins read
bdeca568-b531-4b64-a512-3c0173fa9bbe
-

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ மண் லியோங்கின் வீட்டில் திருடிய குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இந்தோனீசியப் பணிப்பெண் பார்டி லியானி தொடர்பான வழக்கில் இன்னும் பல சந்தேக முடிச்சுகள் இருப்பதால், அதன் தொடர்பில் கூடுதல் விசாரணைகள் நடத்தப்படக்கூடும் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது தரப்பிலான புலனாய்வுக் குறிப்புகளை மீண்டும் ஆராயவிருப்பதாக போலிஸ் நேற்று முன்தினம் தெரிவித்தது. சம்பவம் நடந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் திருடப்பட்ட எல்லா பொருட்களின் விவரங்களும் உள்ளனவா எனும் சந்தேகம் எழுகிறது என்றும் திருவாட்டி பார்டியிடம் எடுக்கப்பட்ட இரண்டு வாக்குமூலங்களும் உரைப்பெயர்ப்பாளர் இல்லாமல் எடுக்கப்பட்டது என்று போலிஸ் கூறியது.

திருவாட்டி பார்டி மற்ற சில இடங்களில் வேலை செய்ய பணிக்கப்பட்டது குறித்து தான் மேற்கொண்ட விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டன என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.