பெரிய அளவிலான வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

பெரிய அளவிலான, 250 பேர் வரை பங்கேற்கக்கூடிய கண்காட்சிகளும் மாநாடுகளும் சிங்கப்பூருக்குத் திரும்ப இருக்கின்றன.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் அத்தகைய முன்னோடி ‘கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை (மைஸ்)’ நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதனை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் வழியாக நேற்று அறிவித்தார்.
இன்னும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்குக் கதவைத் திறந்துவிடும் நோக்கில் 250 பேர் வரை பங்கேற்கும் இந்த முன்னோடி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக திரு சான் கூறினார்.

சிங்கப்பூரில் பொருளியல் நடவடிக்கைகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் விதமாக இப்போது அதிகபட்சம் 50 பேர் என்ற அளவில் இருக்கும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

“வர்த்தக நிகழ்வுகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்குவது முன்னணி ‘கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள்’ மையமாகத் திகழும் சிங்கப்பூரின் நிலையைக் கட்டிக்காக்க உதவும். அத்துடன், அத்துறையிலும் அது சார்ந்த மற்ற துறைகளிலும் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உதவும்,” என்று கழகம் கூறியது.

‘மைஸ்’ துறை 34,000க்கும் அதிகமான வேலைகளை வழங்கி வருகிறது. இதனுடைய பொருளியல் மதிப்பு $3.8 பில்லியன். அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 1% என பயணத்துறைக் கழகம் கடந்த ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.

கொவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ‘மைஸ்’ துறைக்கும் பயணத் துறைக்கும் மீண்டும் உருக்கொடுத்து, புதிய திறன்களை வளர்க்கும் விதத்தில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மற்ற நாடுகளைப் போல அல்லாமல் சிங்கப்பூரின் ‘மைஸ்’ துறை அனைத்துலகச் சந்தையையும் பூர்த்தி செய்து வருகிறது என வலியுறுத்திக் கூறிய அமைச்சர் சான், உள்ளூர் சந்தையை மட்டும் அது நம்பியிருக்க முடியாது என்றும் சொன்னார்.
“அத்துறையைச் சீரமைக்கும்போது, அனைத்துலகப் பயணிகளை சிங்கப்பூரை நோக்கி ஈர்ப்பது எப்படி, கூட்டங்களைப் பாதுகாப்பாக நடத்துவது எப்படி, அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவது எப்படி போன்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்,” என்றார் திரு சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!