பிடோக்கில் வயது முதிர்ந்த தம்பதியைக் கொன்று பின்னர் இந்தோனீசியாவுக்கு தப்பிய பணிப்பெண் 'த ரிவெஞ்சர் குவீன்' என்ற திைரப்படத்தில் வரும் ஒரு காட்சியில் பார்த்ததை வைத்து அந்தத் தம்பதியைக் கொன்றதாக கூறப்படுகிறது.
இந்தோனீசிய உச்ச நீதிமன்ற ஆவணங்களிலிருந்து இது தெரிய வந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கானா அப்துல் முயிஸ் என்ற பெயரிலும் அைழக்கப்படும் கஸானா (படம்) என்ற அந்தப் பணிப்பெண் திரு சியா நிம் ஃபோங், வயது 79, என்பவரையும் அவரது மனைவி திருமதி சின் செங் ஃபா என்பவரையும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கொலை செய்தார்.
இவர் தற்பொழுது இந்தோனீசிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கிணங்க 20 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இந்த இரட்டைக் கொலைகளை செய்த பின் அவர் இந்தோனீசியாவுக்கு தப்பியோடினார். அங்கு அவர் ஒருவாரம் கழித்து பிடிபட்டார்.
அவர் கொலை செய்த முழு விவரங்களும் சென்ற வாரம் நடைபெற்ற மரண விசாரணையில் தெரிய வந்தது. இந்தோனீசியாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புகைப்படங்களும் இடம்பெற்றதால் அவற்றில் வயதான அந்தத் தம்பதியர் எவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.
திரு சியாவைக் கட்டிப்போட்ட பின் கஸானா அவரை ஒரு நாற்காலியால் பலமுறை திரும்பத் திரும்ப, அவர் வலியால் கதறுவதைப் ெபாறுப்படுத்தாது, அடித்துள்ளார். அத்துடன், அவரது மனைவி திருமதி சின் செக் ஃபாவின் நெஞ்சில், அவர் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையிலும், தொடர்ச்சியாக மிதித்ததும் தெரியவந்துள்ளது.
அந்தப் புகைப்படங்களில் தம்பதியர் படுக்கை அறைத் தரையிலும் கழிவறைத் தரையிலும் குழந்தை படுத்திருப்பதுபோல் இருந்த நிலையைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று காலை சுமார் 10.00 மணிக்கு திருமதி சின் தம்மைத் திட்டியதாகவும் அதன் பின்னர் தான் திரு சியாவை படத்தில் வந்ததைப் போல் கட்டிப்போட்டதாகத் தெரிவித்தார்.

