சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் தன்னை மானபங்கம் செய்து விட்டதாக 22 வயது மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இப்போது 24 வயதாகும் லீ யான் ரூ என்ற அம்மாணவர் மும்முறை தன்னை முத்தமிட முயன்றதாகவும் ஆனால் அவரது முயற்சிகளைத் தான் தடுத்துவிட்டதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் நேற்று கூறினார். இப்போது அந்த மாணவி வேறொரு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பின்னிரவில் சேர்ந்து படித்த போது லீ தன்னிடம் அத்துமீற முயன்றதாக அவர் சொன்னார். தனக்குக் காதலர் இருப்பதாகக் கூறியும் அதை லீ கண்டு கொள்ளவில்லை என்றார் அந்த மாணவி. அதிகாலையில் தான் தூங்கி விட்ட பிறகு லீ தன்னை மானபங்கப்படுத்தி விட்டதாக அவர் சொன்னார். அதைத் தொடர்ந்து, அவர் போலிசிடம் புகார் அளித்தார். வழக்கு விசாரணை இன்றும் தொடர உள்ளது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் லீக்கு ஈராண்டு வரை சிறையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்டலாம்.
மாணவர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு
1 mins read

