பாதுகாப்புக்கிடையே உற்சாகமூட்ட வரும் கொண்டாட்டம்

பாதுகாப்புக்கிடையே உற்சாகமூட்ட வரும் கொண்டாட்டம்

1 mins read
ca7197d1-6ecc-4716-b3af-301280100b0c
படம்: கரையோரப் பூந்தோட்டங்கள் -

சீனர்களின் இலையுதிர் காலத் திருவிழாவுக்கான கொண்டாட்டம் கரையோரப் பூந்தோட்டங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் நடந்தேற உள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரையிலான கொண்டாட்டத்தில் இணைய கலைப் படைப்புகள், நடவடிக்கைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புதிய இயல்பு நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இவ்வாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் அமையும்.

குடும்ப ஒன்றுகூடல், சமூக ஒற்றுமை, நெருக்கடி சூழலில் இருக்க வேண்டிய பண்புகள் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட விளக்குக்கூண்டுகள் எங்கும் தொங்கவிடப்பட்டுள்ளன.