அவசர வாகன வழி அறிவிப்புப் பலகைகளை பொருத்த ஏற்பாடு

அவசர வாகன வழி அறிவிப்புப் பலகைகளை பொருத்த ஏற்பாடு

2 mins read
48c427f0-d744-4d88-b4e4-c528bbf8373a
ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலை தோ பாயோ கட்டடத்தில் மூண்ட தீ. படங்கள்: LIANHE ZAOBAO, SCDF/FACEBOOK -

அவ­சர வாக­னங்­கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உள்ள வழிகளைக் குறிக்கும் அறி­விப்­புப் பல­கை­க­ளைப் பெற்­றி­ராத வீவக பேட்­டை­கள் விரை­வில் அவற்­றைப் பெற உள்­ளன.

கடந்த மாதம் 'த பீக் அட் தோ பாயோ'வில் நிகழ்ந்த தீச்­சம்­ப­வத்­திற்­குப் பிறகு இந்தத் தகவல் வெளி­யாகி உள்­ளது.

அச்­சம்­ப­வம் நிகழ்ந்தபோது விரைந்து வந்த தீய­ணைப்பு வாக­னம் ஒன்று அந்­தப் பேட்­டை­யின் உள்ளே செல்ல வேண்­டிய வழிக்­குப் பதில் கவ­னக்­கு­றை­வாக, வெளி­யே­று­வ­தற்­கான வழி­யில் நுழைய முயன்­றது.

வெளி­யே­றும் வழி­யில் வாக­னம் திரும்­பு­வ­தற்­குப் போது­மான இட­மில்லை என்­ப­தோடு அவற்­றில் வாக­னம் நுழை­ய­லாமா என்­பது குறித்த தக­வல் இல்லை.

ஆகஸ்ட் 29ஆம் தேதி அதி­காலை புளோக் 138சி, லோரோங் 1ஏ தோ பாயோ­ கட்­டடத்­தில் தீப்பிடித்தைத் தொடர்ந்து சுமார் 300 பேர் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். தீப்­புண்­க­ளு­ட­னும் மூச்­சுத்­தி­ண­ற­லு­ட­னும் மூவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

கடந்த 2012ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட அந்­தப் பேட்­டை­யில் அவ­சர வாக­னங்­கள் நுழை­வ­தற்­கும் வெளி­யே­று­வ­தற்­கும் உள்ள வழி­கள் குறித்த அறி­விப்புப் பலகை வைக்­கப்­ப­ட­வில்லை.

தீத்­த­டுப்பு விதித்தொகுப்பின்கீழ் அத்­த­கைய அறி­விப்­பு­கள் கட்­டா­யம் என 2018ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்­சி­டி­எஃப்) நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

அதி­காலை 2.55 மணி­ய­ள­வில் தீ மூண்­ட­தாக வந்த அறி­விப்­பைத் தொடர்ந்து 11 வாக­னங்­கள் அந்­தப் பேட்­டைக்­குச் சென்­ற­தா­க­வும் அவற்­றில் 10 வாக­னங்­கள் பிரச்­சி­னை­யின்றி சம்­பவ இடத்தை அடைந்­த­தா­க­வும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

'த பீக்' கட்­ட­டத்­தி­லும் நுழை­வா­யில், வெளி­வா­யி­லைக் குறிக்­கும் அறி­விப்­புப் பல­கை­க­ளைப் பெற்­றி­ராத மற்ற வீவக கட்­ட­டங்­

க­ளி­லும் 2007ஆம் ஆண்டின் தீய­ணைப்பு விதித்­தொ­குப்­பின்­கீழ் அறி­விப்­புப் பல­கை­க­ளைப் பொருத்­து­வது குறித்து வீவ­க­வு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் எஸ்­சி­டி­எ­ஃப்­பின் அறிக்கை குறிப்­பிட்­டது.