பணம் கொடுக்க மறுத்த தாயைத் தாக்கிய மகனுக்கு 2 ஆண்டுகள் சிறை

1 mins read
d3228e61-2e8a-4b3d-b270-085f7bbdf5d8
-

சத்பால் சிங் ஜஸ்வந்த் சிங், 40, என்ற சிங்கப்பூரர், தனக்கு $120 கடனாகக் கொடுக்க மறுத்துவிட்ட தன்னுடைய தாயாரைக் குத்தினார். அதனால் திருவாட்டி ரஞ்சீர் கோர், 69, என்ற அந்த மாது தரையில் விழுந்துவிட்டார். அவருடைய தொடை எலும்பு முறிந்துவிட்டது.

தாக்கியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் சிங்கிற்கு நேற்று இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப் பட்டது.

இனிமேல் பணம் தர முடியாது என்றும் வேலை செய்து சம்பாதிக்குமாறும் தன்னுடைய மகனிடம் அந்தத் தாயார் கூறியதைக் கேட்டு சிங்கிற்கு கோபம் ஏற்பட்டு விட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.