பிரபலமான நான்கு சந்தைகளில் நுழைவுத் தளர்வுகள்

பிரபலமான நான்கு சந்தைகளில் நுழைவுத் தளர்வுகள்

2 mins read
e862fa39-ea96-4f8a-8ed1-f08ed5d8af65
சந்தைகளில் நுழைவுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் ஒரு மீட்டர் பாதுகாப்பான தூர இடைவெளி இன்னும் நடப்பில் இருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் பிர­ப­ல­மான நான்கு சந்­தை­களில் முன்பு விதிக்­கப்­பட்­டி­ருந்த நுழை­வுக் கட்­டுப்­பா­டு­கள் நாளை முதல் முழு­மை­யா­கத் தளர்த்­தப்­ப­டு­கின்றன. இருந்­தா­லும், ஒரு முறைக்கு எத்­தனை பேர் சந்­தைக்­குள் செல்­ல­லாம் என்­ப­தற்கான வரம்பு நீடிக்­கும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று தெரி­வித்­தது.

கேலாங் சிராய் சந்தை, ஈசூன் ரிங் ரோடு புளோக் 104/105ல் உள்ள சொங் பாங் சந்தை, மார்­சி­லிங் லேன் புளோக் 20/21ல் உள்ள சந்தை, ஜூரோங் வெஸ்ட் ஸ்தி­ரீட் 52 புளோக் 505ல் உள்ள சந்தை ஆகி­ய­வையே அந்த நான்கு சந்­தை­கள். சேஃப்என்ட்ரி, ஒரு மீட்­டர் பாது­காப்­பான தூர இடை­வெளி ஆகிய கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

இவ்­வாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி­யி­லி­ருந்து, வார­யி­றுதி நாட்­களில் இந்­தச் சந்­தை­க­ளுக்­கான நுழை­வுக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­போது, சந்­தைக்கு வெளியே கூடு­ம் கூட்­டத்­தின் அளவு கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்­றும் வாரி­யம் விவ­ரித்­தது.

வார நாட்­களில் சந்­தை­க­ளுக்கு வெளியே, மக்­கள் வரிசை இல்­லா­மல் இருந்­தது அல்­லது வரிசை மிகக் குறு­கி­ய­தாக இருந்­தது.

குறிப்­பாக, கேலாங் சிராய் சந்­தை­யி­லும் மார்­சி­லிங் லேன் சந்­தை­யி­லும் இந்த நிலைமை இருந்­தது.

"மேற்­கு­றிப்­பிட்ட நான்கு சந்­தை­க­ளி­லும் வார நாட்­களில் வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக 18% முதல் 48% வரை குறிப்­பி­டத்­தக்க அள­வில் கூடி­யது.

"இது நான்கு சந்­தை­களில் உள்ள கடைக்­கா­ரர்­க­ளுக்கு அதிக வியா­பா­ரத்­தைக் கொடுத்­துள்ள அதே­வே­ளை­யில் வாடிக்­கை­யா­ளர்­களின் வரு­கை­யில் நீக்­குப்­போக்­கை­யும் தந்­துள்­ளது," என்­றும் வாரி­யம் சொன்­னது.

மூன்று வாரங்களுக்கு முன் இருந்ததைப் போலவே, வாரயிறுதி நாட்களில் கூடும் கூட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை என்று குறிப்பிட்ட வாரியம், மிக நீண்ட வரிசை கேலாங் சிராய் சந்தையில் காணப்பட்டது என்றும் அங்கு 100க்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் என்றும் கூறியது.

ஒப்­பு­நோக்க, மார்­சி­லிங் லேன் சந்­தைக்கு வெளியே வரி­சை­யில் சுமார் 70 பேர் நின்­ற­னர்.

இதர இரு சந்­தை­க­ளி­லும் வார­யி­றுதி நாட்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் வரி­சை­யில் காத்­தி­ருப்­ப­தைக் காண முடி­ய­வில்லை.

பர­ப­ரப்­பான இரு சந்­தை­களில் ஒன்­றான கேலாங் சிராய் சந்­தை­யில் ஒரு வாடிக்­கை­யா­ளர் வரி­சை­யில் நின்று சந்­தைக்­குள் செல்ல சுமார் 20 நிமி­டங்­கள் ஆகின்­றது. மார்­சி­லிங் லேன் சந்­தை­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் சந்­தைக்­குள் செல்ல சுமார் 15 நிமி­டங்­கள் எடுத்தது என்று கூறிய வாரி­யம் இது சமா­ளிக்­கக்­கூ­டிய வரி­சை­தான் என்­றும் கருத்­து­ரைத்­தது.

இந்த நான்கு பிரபலமான சந்­தை­களில் நுழை­வுக் கட்­டுப்­பா­டு­கள் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி முதல் முதலில் நடப்புக்கு வந்தன.