கொவிட்-19 அறிகுறிகளைக் கண்டறியும் ‘விவேக முகக்கவசம்’

கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடர்­பான அறி­கு­றி­களை துல்­லி­ய­மா­கக் கண்­ட­றிந்து ஒருங்­கி­ணைந்த கண்­கா­ணிப்பு முறைக்கு அனுப்­பும் ‘விவேக முகக்கவ­சத்தை’ உள்­ளூர் அறி­வி­யல் நிபு­ணர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இந்த விவேக முகக்கவ­சத்தை அணிந்­தி­ருப்­ப­வ­ரின் சரும வெப்­ப­நிலை, ரத்­தத்­தில் உள்ள பிரா­ண­வாயு அளவு, ரத்த அழுத்­தம், நாடித்­து­டிப்பு ஆகிய கொவிட்-19 தொடர்­பி­லான அனைத்து அறி­குறிகளை­யும் முகக்கவ­சங்­களில் உள்ள உணர் கருவி கண்­ட­றி­யும்.

இது­போன்ற நோய் கண்­ட­றி­யும் முறையை உரு­வாக்க வேண்­டும் என்ற எண்­ணம் தங்­கள் குழு­வுக்கு நோய் முறி­ய­டிப்­புக் காலத்­தின்­போது தோன்­றி­யது என்று கூறிய நிபு­ணர்­கள் குழு­வின் உறுப்­பி­ன­ரான இணைப் பேரா­சி­ரி­யர் லோ சியான் ஜுன், “கொவிட்-19 நோயா­ளி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் பகு­தி­யில் வைக்­கப்­பட்­ட­போது, முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் 30 நிமி­டங்­க­ளுக்கு ஒரு முறை சென்று அவர்­க­ளின் உடல் வெப்­ப­நிலை, ரத்­தத்­தில் உள்ள பிரா­ண­வாயு அளவு போன்­ற­வற்றை அறிந்து வந்­தார்­கள்,” என்­றும் விவ­ரித்­தார்.

பேரா­சி­ரி­யர் லோ, ஏ-ஸ்டார் அமைப்­பின் ஆய்வு மற்­றும் பொறி­யி­யல் பிரி­வின் தலைமை இயக்­கு ­ந­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

“நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டுள்ள மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் கிரு­மி­யின் தாக்­கம் இருப்­பதை கண்­ட­றிந்த நாங்­கள், நோயா­ளி­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் முன்­க­ளப் பணி­யா­ளர்­களைப் பாது­காக்க ஏதா­வது செய்­தாக வேண்­டும் என்ற முடி­வுக்கு வந்­தோம்,” என்­றார் பேரா­சி­ரி­யர் லோ.

“நோயா­ளி­கள் கண்­கா­ணிப்­பின்­போது தாதி­யர் பெரிய சாத­னங்­களை அறைக்கு அறை தள்­ளி கொண்டு ­போ­வது அவர்­க­ளுக்கு மேலும் அசௌ­க­ரி­யத்­தைக் கொடுக்­கும் அதே­வே­ளை­யில் நோய் பர­வும் அபா­யத்­தை­யும் அதி­க­ரிக்­கும் என்­றும் பேரா­சி­ரி­யர் லோ சொன்­னார்.

மருத்­து­வ­ம­னை­களில் உள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு விவேக முகக்கவ­சங்­கள் கொடுக்­கப்­ப­ட­லாம். அதன் மூலம் அவர்­களின் நோய் தொடர்­பான அறி­குறி­க­ளைத் தூரத்­தில் இருந்­த­வாரே கண்­ட­றிய முடி­யும் என்­ப­தால், முன்­களப் பணி­யா­ளர்­க­ளுக்கு வரக்­கூடிய அபா­யம் நீக்­கப்­ப­ட­லாம்.

மூன்று வித­மான உணர் கருவி­களை ஒருங்­கி­ணைக்­கும் ஒரு சில்­லுக்­குள் கொண்டு வரும் முறை இப்­போது சோதிக்­கப்­பட்டு வரு­கிறது என்று குறிப்­பிட்ட நிபு­ணர்­கள் குழு, அந்­தக் கரு­விக்­குள் புளு­டூத் கரு­வி­யும் இணைக்­கப்­படு­வ­தால், நோய்க்­கான அறி­கு­றி­களை கைபேசி மூல­மா­க­வும் தெரிந்துகொள்­ள­லாம் என்­ற­னர்.

முகக்கவ­சத்­தில் உள்ள உணர் கருவி, தோல் போன்ற மெல்­லிய பொரு­ளுக்­குள் வைக்­கப்­ப­டு­வ­தால், முகக்­க­வ­சத்­தைக் கழு­வும்­போது அது உணர் கரு­வி­யைப் பாதிக்­கா­மல் பார்த்­துக்­கொள்­ளும் என்­றும் விளக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!