$40 மில்லியனுக்கு பொருள் மேம்பாட்டு மையம்

$40 மில்லியனுக்கு பொருள் மேம்பாட்டு மையம்

1 mins read
d62934a0-5914-411e-b953-a853626bcd89
புதிய மையம் லெண்ட்லீஸ் நிறுவனத்தின் பாய லேபார் குவாட்டர் அலுவலகத்தில் இருக்கும். படம்: லெண்ட்லீஸ் -

சிங்கப்பூரில் அடுத்த மாதம் $40 மில்லியன் மதிப்பிலான பொருள் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அனைத்துலக சொத்து நிறுவனமான லெண்ட்லீஸ் நேற்று அறிவித்தது.

அடுத்த 12 மாதங்களில் 50 தொழில்நுட்ப மென்பொருள் மேம்பாட்டு ஊழியர்களை மையம் பணியில் அமர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவர் என்று லெண்ட்லீஸ் நிறுவனம் தெரிவித்தது.

வேலைக்கு எடுக்கப்படும் ஐந்து பேரில் குறைந்தது ஒருவர் பட்டதாரியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரை வேலையில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

புதிய மையம் சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் செயல்படும் லெண்ட்லீஸ் நிறுவனத்தின் மூன்றாவதாகும்.

முதல் இரண்டு மையங்கள் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகன் வெலியிலும் சிட்னியிலும் அமைந்துள்ளன.

லெண்ட்லீஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும்பாலும் பாய லேபார் குவாட்டரில் உள்ள அதன் அலுவலகத்தில் பணிபுரிவர்.

புதிய மையம் பாய லேபார் குவாட்டரில் உள்ள அலுவலகத்தில் அமைந்திருக்கும்.

400க்கும் மேற்பட்ட லெண்ட்லீஸ் ஊழியர்கள் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர்.

மின்னிலக்க சாதனங்களையும் சேவைகளையும் புதிய மையம் அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. சொத்துத் துறையில் உள்ள வடிவமைப்பு, கட்டுமானம், விநியோகப் பிரிவுகளிடையிலான தொடர்பை புதிய மையம் எளிமைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.