இம்மாதம் 18ஆம் தேதி முதல் சிங்கப்பூர் -ஜப்பான் பயணம்

இம்மாதம் 18ஆம் தேதி முதல் சிங்கப்பூர் -ஜப்பான் பயணம்

2 mins read
0381561c-e213-4b2c-84e9-92ac6c6aef1e
-

தங்­கள் நாட்டு மக்­கள் அத்­தி­யா­வ­சி­ய­மான வர்த்­தக மற்­றும் அதி­கா­ரத்­துவ பய­ணங்­களை மேற்­கொள்ள வகை செய்­யும் பொருட்டு, சிங்­கப்­பூ­ரும் ஜப்­பா­னும் இணக்­கம் தெரி­வித்து உள்­ளன.

அந்த இணக்­கத்­தின்­படி, இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணங்­கள் இம்­மா­தம் 18ஆம் தேதி தொடங்­கும் என்று கூறப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான வர்த்­தக பய­ணங்­கள் ஆகா­யப் போக்­கு­வ­ரத்து இணைப்­பை­யும் மேம்­ப­டுத்­து­வ­து­டன் இரு­நாட்­டுப் பொரு­ளி­யல் மீட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­க­வும் செய்­யும் என்று சிங்­கப்­பூர், ஜப்­பான் ஆகி­ய­வற்­றின் வெளி­யு­றவு அமைச்­சு­கள் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் விவ­ரித்­தன.

இருவழி தடையற்ற பயணப் பாதை ஏற்­பா­டு­களை சிங்­கப்­பூர் மற்ற பல நாடு­க­ளு­டன் செய்­தி­ருந்­தா­லும் ஜப்­பான் இன்­னொரு நாட்­டு­டன் செய்­து­கொள்­ளும் முத­லா­வது பரஸ்­பர இரு­த­ரப்பு பயண ஏற்­பாடு இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த இருவழி தடையற்ற பயணப் பாதை, எல்லை தாண்­டிய பய­ணங்­க­ளை­யும் சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளின் பொதுச் சுகா­தார பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளு­டன் வர்த்­த­கப் பரி­மாற்­றங்­களை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கும் வழி செய்­கிறது என்று சிங்­கப்­பூ­ரும் ஜப்­பா­னும் தெரி­வித்­தன.

பய­ணத்­துக்கு முந்­திய பரி­சோ­தனை, சம்­பந்­தப்­பட்ட நாட்­டைச் சென்­ற­டைந்­த­வு­டன் மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­தனை, நாட்­டைச் சென்று சேர்ந்­த­வு­டன் அடுத்த 14 நாட்­க­ளுக்­கு­மான கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பயண விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தல் போன்­றவை இந்­தப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

இதன் தொடர்­பான, சுகா­தார நெறி­மு­றை­கள், விண்­ணப்­பிக்­கும் வழி­கள் போன்ற செயல்­முறை விவ­ரங்­கள் ஜப்­பான் வெளி­யு­றவு அமைச்­சின் இணை­யத்தளத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் 'சேஃப் ­டிரா­வல்' இணை­யத்தளத்­தி­லும் இம்­மா­தம் 18ஆம் தேதிக்­குள் வெளி­யி­டப்­படும்.

பல கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும் வேளை­யில் சிங்­கப்­பூர் இது­வரை ஐந்து நாடு­க­ளின் பய­ணி­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்து உள்­ளது.

ஜூன் 3ஆம் தேதி சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு­வழி தடை யற்ற பயணப் பாதையை அறி­வித்­தன. இந்த ஏற்­பா­டு­கள் வழி பய­ணம் செய்­வோர் 14 நாடு­கள் தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ர­வி­லி­ருந்து விலக்கு பெறு­வார்­கள்.

சிங்­கப்­பூர் பின்­னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மலே­சி­யா­வு­டன் இரு­வழி தடையற்ற பயணப் பாதை ஏற்பாட்டை நீண்­ட­கால வேலைக்கு அனு­ம­தி­ய­ளிப்பதற்காகச் செய்­து­கொண்­டது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் நியூ­சி­லாந்து, புருணை நாடு­க­ளின் பொது­வான பய­ணி­கள் மேற்­கூ­றப்­பட்ட இரு பயண அனு­ம­தி­யின்­படி சிங்­கப்­பூர் வரத் தொடங்­கி­னர். பின்­னர் செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல் புரு­ணை­யின் மக்­கள் இரு­வழி தடையற்ற பயணப் பாதை மூலம் சிங்­கப்­பூர் வர­லாம்.

சிங்­கப்­பூ­ருக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இடை­யி­லான வர்த்­தக மற்­றும் அதி­கா­ரத்­துவ பய­ணங்­கள் செப்­டம்­பர் 2ஆம் தேதி முதல் தொடங்­கும் என்று கூறப்­பட்­டுள்ள நிலை­யில் ஹாங்­காங்­கும் இதே ஏற்­பாட்­டின் மூலம் பய­ணங்­க­ளை தொடங்­கு­வது பற்றி பேச்சு நடத்த சிங்­கப்­பூர் நேற்று முன்­தி­னம் அழைப்பு விடுத்­தது.