தீ விபத்துக்கு வழிகோலும் செயலுக்கு கடும் தண்டனை

தீ விபத்துக்கு வழிகோலும் செயலுக்கு கடும் தண்டனை

2 mins read

திருத்தப்பட்ட சட்டம் வரும் திங்கட்கிழமை முதல் அமல்

தீ பற்­று­வ­தைத் தடுக்­கும் பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுக்குக் கடு­மை­யான பாதிப்­பு­களை யாரா­வது ஏற்­ப­டுத்­தினால் அவர்­கள் மீது வரும் திங்­கள் முதல் உட­ன­டி­யாக வழக்­குத் தொடுக்க முடி­யும்.

தீ மூளும்போது தப்பிச் செல்­வ­தற்­கான வழி­க­ளுக்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­து­வது போன்ற குற்­றங்­க­ளைச் செய்­ப­வர்­கள் இனி­மேல் கடு­மை­யான தண்­ட­னை­களை எதிர்­நோக்க வேண்டி இருக்­கும்.

தீ பாது­காப்­புச் சட்­டத் திருத்தங் கள் திங்­கட்­கி­ழமை முதல் நடப்­புக்கு வரு­கின்றன. நாடா­ளு­மன்­றத்­தில் சென்ற ஆண்டு நிறை­வேறிய அந்­தச் சட்­டத் திருத்தங்கள், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு அதிக அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்றன.

தீ பற்­றா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான அதிக ஒழுங்­கு­முறை மற்றும் அம­லாக்க அதி­கா­ரங்­க­ளை­ இந்­தப் படை பெற்­றி­ருக்க புதிய சட்­டத் திருத்தங்கள் வகை செய்­கின்றன.

அதோடு மட்­டு­மின்றி, எளி­தில் தீப்­பி­டிக்­கக்­கூ­டிய பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தடுக்­கும் வகை­யில் புதிய குற்­றச்­செ­யல்­களும் புதிய சட்­டத்­தில் வரை­ய­றுக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

தொழில்­துறை நிபு­ணத்­து­வர்­கள் முறை­யாக மேற்­பார்­வை­யி­டா­மல் தீ பாது­காப்­புப் பணி­க­ளுக்கு முறை­யா­கச் சான்­றி­தழ் வழங்­கா­மல் பொறுப்­பற்ற முறை­யில் நடந்­து­கொண்­டால் அவர்­க­ளுக்கு இனிமேல் கிடைக்­கும் தண்­டனை அதி­க­மாக இருக்­கும்.

தீ எச்­ச­ரிக்கை ஒலி சாத­னங்கள், தீ ஏற்­படும் போது தண்­ணீரை பீய்ச்சி அடிப்­ப­தற்­கான குழாய்­கள் ஆகி­ய­வற்றைப் பொருத்­து­வது போன்ற தீ பாது­காப்பு அம்­சங்­களைக் கட்­டட உரி­மை­யா­ளர்­கள் கட்­டா­ய­ம் மேம்­ப­டுத்த வேண்­டும்.

இதனை செய்­வ­தற்­கான அதி­கா­ரம் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு இருக்­குமென தெரி­விக்­கப்­பட்டது.

இந்­தப் படை கட்­டட உரி­மை­யா­ளர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு அவர்­க­ளின் கட்­ட­டங்­களில் தீ பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேம்­படுத்­தும் என்று அறிக்கை ஒன்­றில் உள்­துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது. தீ மூளாமல் தடுக்க கடு­மை­யான பாது­காப்பு விதி­மு­றை­கள் தேவை என்­பது சென்ற ஆண்டு தெளி­வா­கத் தெரி­ய­வந்­தது.

தீ தடுப்பு நட­வ­டிக்­கை­களில் தீய­ணைப்­பா­ளர்­கள் ஈடு­பட்­ட­போது குறை­பா­டு­டன் கூடிய தீ பாது­காப்­புச் சாத­னங்­களைப் பல இடங்­களிலும் அவர்­கள் கண்­டார்­கள்.

இத­னை­ய­டுத்து கடு­மை­யான பாது­காப்பு விதி­மு­றை­கள் தேவை என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இப்­போ­தைய சட்­டங்­க­ளின்படி, தீ பாது­காப்பு ஏற்­பா­டு­களில் ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற தரப்பு­களுக்கு இந்­தப் படை எச்­ச­ரிக்கைக் கடி­தங்­களை அனுப்­பும். அவற்­றுக்­குக் கீழ்­ப­டிய தவ­றி­னால்­தான் நீதி­மன்ற நட­வ­டிக்­கையைக் குடி­மைத் தற்­காப்­புப் படை எடுக்க முடி­யும்.

ஆனால் இப்­போது நடப்­புக்கு வர­வி­ருக்­கும் புதிய சட்­டத்­தின்­படி இந்­தப் படை உட­ன­டி­யாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­யில் இறங்­க­மு­டி­யும்.

மருத்­து­வ­ம­னை­க­ளாக, தாதிமை இல்­லங்­க­ளாக, உடற்­கு­றை­யா­ளர்­களுக்­கான இல்­லங்­க­ளாக, ஊழி­யர் தங்­கும் விடு­தி­க­ளா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் கட்­ட­டங்­களில் அவ­சர கால ஆயத்த நட­வ­டிக்­கை­கள் கட்­டா­யம் இடம்­பெற்று இருக்க வேண்­டும் என்­றும் உள்­துறை அமைச்சு நேற்­றைய தனது அறிக்­கை­யில் அறி­வித்து இருக்­கிறது.

வெவ்­வே­றான கட்­ட­டங்­களில் எந்­தெந்த வகை தீ பாது­காப்­புச் சாத­னங்­கள் மற்­றும் அவ­ச­ர­கால குழுக்­கள் தேவை என்­பதை வரை­ய­றுக்­கும் அதி­கா­ர­மும் இந்­தப் படைக்கு இருக்­கும்.