பணம் திருடிய பணிப்பெண்ணுக்கு 4 வாரம் சிறை

பணம் திருடிய பணிப்பெண்ணுக்கு 4 வாரம் சிறை

1 mins read

இந்தோனீசியாவைச் சேர்ந்த ரீனா திலார், 46, என்ற பணிப்பெண் நான்கு மாத காலத்தில் மொத்தம் $1,000க்கும் அதிக மதிப்புள்ள பணத்தை பலதடவை திருடினார். இதற்காக அவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை கிடைத்தது.

சியூ கென் வீ, 39, என்பவர் ஜனவரி 28ஆம் தேதி அந்தப் பெண்ணை வேலையில் அமர்த்தினார்.

குடும்பத்தினர் மாலை நேரத்தில் வெளியே சென்றிருந்த நேரங்களில் அந்தப் பெண் பணத்தைத் திருடி இருக்கிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.