சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த ஏப்ரல் 7முதல் ஜூன்1 காலகட்டத்தில் யாரும் சரியான காரணம் இன்றி வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது, யாரையும் சந்திக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால் அதை மீறி பலர் 195சி காம்பஸ்வேல் கிரசெண்ட் முகவரியில் உள்ள லியோங் சீ முன், 37, என்பவரின் வீட்டில் மே 8ஆம் தேதி காலை 6 மணி முதல் கூடினர். இதற்காக 11 பேருக்கு ஏற்கெனவே $2,500 முதல் $4,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் லியோங்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவருக்கு நேற்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதர ஆறு பேருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது,

