மகிழ்உலா விமானங்களை இயக்க எஸ்ஐஏ ஆலோசனை

கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகத்தைச் சற்று மீட்கும் முயற்சியாக, சாங்கி விமான நிலையத்திலேயே கிளம்பி, வானில் சுற்றியபின் மீண்டும் அவ்விமான நிலையத்திலேயே இறங்கும் வகையில், மகிழ்உலா விமானங்களை (ஃபிளைட்ஸ் டு நோவேர்) இயக்குவது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ஆராய்ந்து வருகிறது.

உள்ளூர் பயணிகளுக்காக இந்தப் புதுவித விமான சேவையை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கும் பணியை எஸ்ஐஏ மேற்கொண்டு வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறுகிறது.

ஆர்வமுள்ள பயணிகள், சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகையைப் பெற்று, விமானக் கட்டணத்தில் பகுதித் தொகையைச் செலுத்தி, அத்தகைய விமானங்களில் சென்று வர அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடன் பங்காளித்துவம் அமைத்துச் செயல்படுவது குறித்தும் எஸ்ஐஏ ஆராய்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அவ்விமானங்கள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வானில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்துக் கேட்டதற்கு, "வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளச் செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்று எஸ்ஐஏ பேச்சாளர் சொன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இதற்கு முன்னரும் ஒருமுறை மகிழ்உலா விமானத்தை எஸ்ஐஏ இயக்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அறப்பணி நடவடிக்கையாக சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் என 300க்கும் மேற்பட்ட சமூக உண்டியல் திட்டப் பயனாளிகளை அந்த விமானம் ஏற்றிச் சென்றது.

மகிழ்உலா விமானங்கள் குறித்து எஸ்ஐஏ எந்த விவரங்களையும் வெளியிடாத நிலையில், அத்தகைய திட்டங்கள் ஒரு தொகுப்பாக இருக்கலாம் என 'சிங்கப்பூர் ஏர் சார்ட்டர்' நிறுவனத்தின் இயக்குநர் திரு ஸ்டீஃபன் உட் கூறினார்.

ஹோட்டல்களில் தங்குதல், ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் பொருள் வாங்கப் பற்றுச்சீட்டுகள், வாடிக்கையாளர்களை ஏற்றிச் சென்று வர கார் சேவை போன்றவை அத்தொகுப்பில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

மகிழ்உலா விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என திரு உட் நம்பிக்கை தெரிவித்தார்.

அவரது நிறுவனம் நடத்திய ஒரு கருத்தாய்வில் பங்கேற்ரோரில் 75 விழுக்காட்டினர் அத்தகைய விமானங்களில் சென்று வருவதற்குச் செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!