251 வேலைகளை உருவாக்கும் ஜெர்மானிய தளவாட நிறுவனம்

ஜெர்மானியத் தளவாட நிறுவனமான டிபி ஷெங்கா சிங்கப்பூரில் தனது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக மேலும் 251 பணி இடங்களைச் சேர்க்கவிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, செயல்முறைப் பொறியியல் போன்ற துறைகளில் ஆள்சேர்ப்பு இடம்பெறும் என்று அந்நிறுவனத்தின் ஒப்பந்தத் தளவாடம், விநியோகத் தொடர் நிர்வாகத்திற்கான துணைத் தலைவர் கேத்தரின் சூ தெரிவித்துள்ளார்.

'டாய்ச் பான் ஏஜி' எனும் ஜெர்மானிய ரயில் நிறுவனத்திற்குச் சொந்தமான டிபி ஷெங்கா, சாங்கியில் உள்ள சிங்கப்பூர் விமான நிலைய தளவாடப் பூங்காவின் தடையற்ற வர்த்தகப் பகுதியில் $163 மில்லியன் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தனது புதிய கிடங்கின் செயல்பாட்டைத் தொடங்கியது.

உலகளவில் அந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய முதலீடு இதுதான். கிட்டத்தட்ட ஏழு காற்பந்துத் திடல் அளவிற்கு, அதாவது 55,000 சதுர அடி பரப்பளவில் ஐந்து தளங்களில் அக்கிடங்கு அமைந்துள்ளது.

இந்தப் புதிய கிடங்குடன் சேர்த்து, டிபி ஷெங்கா நிறுவனம் சிங்கப்பூரில் அத்தகைய 13 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றின் மொத்த பரப்பளவு 2.8 மில்லியன் சதுர அடி.

புத்தாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் தளவாடத் துறையில் புதுப் புது வழிகளில் பணி ஆற்றுவதைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த 'ரெட் லயன்' கிடங்கு பணியாளர்களுக்கு நல்லதொரு தளத்தை வழங்கி வருவதாக திருவாட்டி சூ குறிப்பிட்டார்.

முப்பரிமாணக் கண்கொண்டு, ஒரே நேரத்தில் பொருட்களை எடுத்து, வில்லை ஒட்டி, சிப்பமிடும் பணிகளைச் செய்யும் இயந்திர மனிதன் உட்பட பல தானியக்க வசதிகளை அக்கிடங்கு கொண்டு இருக்கிறது.

விமானம் வழியாக இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை 40% வேகமாகக் கையாளுவதற்கான தொழில்நுட்பங்களையும் 'ரெட் லயன்' கிடங்கு பயன்படுத்தி வருவதாக திருவாட்டி சூ கூறினார்.

குறிப்பாக, பயனீட்டாளர், மின்வணிகம் போன்ற அதிகமான சரக்குப் பட்டியலைக் கொண்ட வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைக் கையாள அந்தத் தொழில்நுட்பங்கள் பெரிதும் பயன்படுவதாக அவர் சுட்டினார்.

1,440 ஒளிமின்னழுத்த சூரிய சக்தித் தகடுகள் போன்ற நீடித்து நிலைக்கத்தக்க பல வசதிகளையும் டிபி ஷெங்காவின் அப்புதிய கிடங்கு கொண்டுள்ளது. இதன்மூலம் எரிசக்திப் பயன்பாடு கிட்டத்தட்ட 35% குறையும் எனச் சொல்லப்பட்டது.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் டிபி ஷெங்கா நிறுவனம், வர்த்தகப் பகுப்பாய்வு, மாற்ற நிர்வாகம், இடர் சார்ந்து முடிவெடுக்கும் அணுகுமுறை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் உன்னத சேவை நிலையம் ஒன்றை இங்கு தொடங்கியது.

சாங்கியில் உள்ள விமான நிலைய தளவாடப் பூங்காவில் அண்மையில் செயல்பாட்டைத் தொடங்கிய டிபி ஷெங்கா தளவாட நிறுவனத்தின் புதிய 'ரெட் லயன்' கிடங்கு. படம்: டிபி ஷெங்கா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!