தங்கும் விடுதி உரிமையாளர்கள்: கடைப்பிடிக்க தவறினால், விதிமுறைகளுக்கு பலனில்லை

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், தங்களின் விடுதிவாசிகள் ஒருவரோடு ஒருவர் பழகுவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இருப்பினும் எடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது என்று கூறிவிட முடியாது என்கின்றனர் தங்கும் விடுதி உரிமையாளர்கள்.

கட்டுப்பட்டு நடக்காதவர்கள் உள்ளவரை, எந்தவித விதிமுறைகளும் பலனளிக்காது என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு மாதத்திற்கு முன்னர் சிங்கப்பூரில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து தினமும் சராசரியாக 45 ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இன்னமும் உறுதி செய்யப்படுவதாக புதன்கிழமையன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கொவிட்-19 பரிசோதனையை 14 நாட்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் செய்துகொள்வது போன்ற தொடர் கண்காணிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் தொடர்புகளின் தடங்களை அறியும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரண்டும் வெளிநாட்டு ஊழியர்களிடையே புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவுகின்றன.

வேறு வழிகளிலும்

கிருமி தொற்றலாம்

இதற்கிடையே 'செண்டுரியன்' தங்கும் விடுதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு கொங் சீ மின் வேறு ஒரு சூழலை முன்வைத்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் தங்கும் விடுதிகளில்தான் தொற்றால் பாதிக்கப்படுவர் என்று கூறிவிட முடியாது என்றார்.

வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் ஊழியர்களுக்கு வேறு இடங்களிலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வேலையிட முதலாளிகள், ஊழியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுவதை அவர் சுட்டினார்.

முதலாளிகள், ஊழியர்கள், தங்கும் விடுதிகளின்

ஒருங்கிணைந்த முயற்சி

வேலைத்தளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலாளிகள் அமல்படுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளின் நோக்கத்தை ஊழியர்கள் புரிந்துகொண்டு கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

'செண்டுரியன்' நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் ஐந்து 'வெஸ்ட்லைட்' தங்கும் விடுதிகளில் 16,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது தங்கியுள்ளனர். அண்மையில் இந்த ஐந்தில் இரண்டு தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.

குறிப்பிட்ட ஒரு கட்டடத்தில் அல்லது மாடியில் வசிப்பவரை மட்டுமே அனுமதிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் திட்டம் ஐந்து தங்கும் விடுதிகளிலும் உள்ளது. மேலும் வேலை அல்லது அத்தியாவசிய சேவைகளுக்காக செல்வதைத் தவிர விடுதிவாசிகள் தங்களின் அறைகளிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அவ்வாறு இருந்தும் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

கட்டுப்பட்டு நடப்பதன்

முக்கியத்துவத்தை

உணர்த்த வேண்டும்

முக அங்க அடையாளம் அல்லது அட்டையைப் பயன்படுத்தி தங்கும் விடுதிக்குள் அனுமதி போன்றவற்றை 'ஹியுலெட்' தங்கும் விடுதியில் பின்பற்றுவதாக கூறினார் திரு ஜேக் இங்.

வெவ்வேறு மாடிகளுக்கு வெவ்வேறு மின்தூக்கிகளும் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் போதுமானவை என்று அவர் கூறினாலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடப்பதன் முக்கியத்துவத்தை ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!