சிங்டெல் நிறுவனம், அதன் '5ஜி' தொழில்நுட்பத்திற்கான முதலீட்டைப் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
இன்னும் ஈராண்டுகளில் பாதி சிங்கப்பூருக்குத் தனது '5ஜி' கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள், திட்டமிட்டபடி சரியாக நடந்து வருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு யுவென் குவான் மூன் தெரிவித்தார்.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் முழு நாடும் வசதியைப் பெற்றுவிடும் என்றும் அவர் கூறினார். இந்த முதலீட்டை நிறுவனம் 'மிகவும் முன்னெச்சரிக்கையான முறையில்' அணுகும் என்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை முதலீட்டுக்கு ஏற்ப லாபமும் திரும்பக் கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
நிறுவனத்தின் முதல் 24 மணி நேர ஆளில்லா நடமாடும் வர்த்தகக் கடை குறித்தும் அவர் அறிவித்தார். கடையின் சுய சேவை இடங்களில் வாடிக்கையாளர்கள் சொந்தமாக பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

