நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டதில் 71 வயது மாது ஒருவர் காயமுற்றார். கிளமெண்டி சாலை, உலு பாண்டான் சாலை சந்திப்பில் நேற்று காலை இவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய வாகனம் ஒன்றின் பெண் ஓட்டுநர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
ஒரு டாக்சி, இரண்டு கார்கள், ஒரு லாரி ஆகியவை விபத்துக்குள்ளானதன் தொடர்பில் போலிசாருக்கு நேற்று காலை 9.11 மணிக்குத் தகவல் கிடைத்தது.
விபத்து தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்தில் காணப்பட்ட சிவப்பு நிற 'டிரான்ஸ்-கேப்' டாக்சியின் முன்பக்க இடக் கதவு சேதமடைந்திருந்தது.
மேலும் வாகனப் போக்குவரத்துப் பணிகளுக்காக சாலையில் போலிஸ் அதிகாரிகளும் காணப்பட்டனர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

