புதிதாக 42 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று; சமூகத்தில் நால்வர் பாதிப்பு

புதிதாக 42 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று; சமூகத்தில் நால்வர் பாதிப்பு

1 mins read
1519747d-b043-411e-8ae3-9bb15ee37127
-

இன்று புதிதாக 42 பேருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் நால்வர் சமூக அளவில் நோய்ப் பரவல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர் என்றும் இதர மூவர் வேலை அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய நோய்த் தொற்று எண்ணிக்கையில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.