அதிவேகக் கார் விரட்டலில் 31 வயது ஆடவர் கைது

அதிவேகக் கார் விரட்டலில் 31 வயது ஆடவர் கைது

1 mins read
4a7c3123-0e78-4479-b96c-328dd2a3389b
-

மத்திய விரைவுச் சாலையில் இருந்து கேன்பெர்ரா ஸ்திரீட் வரை அதிகாலை நேரத்தில் அதிவேகக் கார் விரட்டலில் ஈடுபட்ட 31 வயது வாகன ஓட்டுநர் கைதானார்.

அந்தக் கார் ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. அதன் உள்ளே இருந்த பயணி கீழே இறங்கி ஓடிவிட்டார். அவர் இன்னமும் பிடிபடவில்லை என்று இன்று போலிஸ் தெரிவித்தது.

போலிஸ் அதிகாரிகள் இன்று அதிகாலை சுமார் 1.10 மணிக்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால் அந்தக் காரை ஓட்டி வந்தவர் அதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் தன் வாகனத்தை வேகமாக ஓட்டினார்.

அதிகாரிகளும் வாகனங்களில் விரட்டினார்கள். கடைசியில் கேன்பெர்ரா ரோட்டில் மரத்தின் மீது மோதி கார் நின்றது. புலன் விசாரணை தொடர்கிறது.