மசெக முன்னாள் தேர்தல் வேட்பாளரின் ஃபேஸ்புக் கணக்கு ஊடுருவல்

மசெக முன்னாள் தேர்தல் வேட்பாளரின் ஃபேஸ்புக் கணக்கு ஊடுருவல்

1 mins read
d94ac5aa-c597-4f86-a011-b8f5c9fa6a39
படங்கள்: PAP, FACEBOOK -

மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் தேர்தல் வேட்பாளர் விக்டர் லாயின் ஃபேஸ்புக் கணக்கு ஊடுருவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கணக்கில், ஆடைகள் மற்றும் பாத்திரங்களை விற்கும் பெண்களைக் காட்டும் காணொளிகள் நேற்று காலை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் திரு லாயின் ஃபேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற மசெக அணியில் இடம்பெற்ற திரு லாய், ஐந்து நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் கணக்கின் கட்டுப்பாட்டைத் தாம் இழந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

அது வரை தாம் அந்தக் கணக்கை நிர்வகித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதுகுறித்து தம்மை தொடர்புகொள்வதற்கு முன்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்தக் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி தமக்குத் தெரியாது என்று திரு லாய் சொன்னார்.

தமது கணக்கு ஊடுருவப்பட்டிருப்பது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தாம் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.