ஈஸ்ட் கோஸ்ட் முதியோர் திட்டம் தொடங்கியது; அதிக வசதிகள், உதவிகள் கிடைக்கும்

ஈஸ்ட் கோஸ்ட் முதியோர் திட்டம் தொடங்கியது; அதிக வசதிகள், உதவிகள் கிடைக்கும்

3 mins read
fce0773e-77a9-4513-ab21-51b3a1b9ebd0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈஸ்ட் கோஸ்ட் தொகு­தி­யில் வசிக்கும் முதி­ய­வர்­க­ளுக்கு இன்­னும் சிறந்த பல வச­தி­கள் கிடைக்க இருக்­கின்­றன.

பரா­ம­ரிப்­பா­ளர்­கள், தொண்டூழியர்­கள் அடங்­கிய ஓர் ஆதரவுக் கட்­ட­மைப்­பும் அவர்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்ட இருக்­கிறது.

மக்­கள் மூப்­ப­டை­வ­தற்கு ஒரு நல்ல இட­மாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தியை ஆக்­கு­வ­தற்­கான திட்­டம் இதற்கு வகை செய்­கிறது.

'ஈஸ்ட் கோஸ்ட் முதி­யோர் திட்டம்' எனப்­படும் அந்­தத் திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

தனி­யாக வாழ்ந்­தா­லும் முதி­ய­வர்­கள் சுறு­சு­றுப்­பான வாழ்வை நண்­பர்­க­ளு­டன், சமூ­கத்­தா­ரு­டன் அனு­ப­விக்­கும் வகை­யில் அந்த நகர் பல வச­தி­க­ளைக் கொண்­டி­ருக்­கும். அக்­கம்பக்­கத்­தி­னர் முதி­ய­வர்­களை நன்கு கவ­னித்­துக் கொள்­வார்­கள்.

தொடக்­க­மாக அந்­தத் தொகுதி­யில் வசிக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கான தேவை­கள் பற்றி நன்கு புரிந்­து­கொள்ள ஆய்வு ஒன்று நடத்­தப்­படும்.

அதே­வே­ளை­யில், அந்­தத் தொகு­தியை முதி­ய­வர்­க­ளுக்­குப் பாது­காப்­பா­ன­தா­க­வும் எளி­தாக எட்­டக்­கூடி­ய­தா­க­வும் ஆக்­கு­வ­தற்­கான மேம்­பாட்டு வச­தி­களை முடிவு செய்ய நக­ரில் கணக்கெடுப்புகளும் நடத்­தப்­படும்.

ஈஸ்ட் கோஸ்ட் முதி­யோர் திட்­டத்தை நேற்று காணொளி கூட்­டம் மூலம் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அறி­வித்­தார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யின் அடித்­தள ஆலோ­ச­க­ரும் அந்­தத் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு ஹெங், தீவி­ர­மாக இதில் பங்­கெ­டுத்­துக் கொள்­ளும்­படி குடி­மக்­களை வலி­யு­றுத்­தி­னார்.

திரு ஹெங்­கும் அவ­ரு­டைய நான்­காம் தலை­முறை அர­சி­யல் தலை­வர்­களும் சென்ற ஆண்டு 'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர்' என்ற இயக்­கத்­தைத் தொடங்­கி­னார்­கள்.

கொள்கைகளை உரு­வாக்­கும் போது அதில் குடி­மக்­க­ளுக்கு அதிக பங்­கை­யும் உரி­மை­யை­யும் வழக்­க­மாக கொடுத்து வரு­வது அந்த இயக்­கத்­தின் நோக்­கம்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு வேறு­பாட்­டைச் சாதிக்­க முடியும் என்றும் எல்­லா­ரும் சேர்ந்­தால் பெரும் வேறு­பாட்டை ஏற்­ப­டுத்­த­லாம் என்றும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

ஏதா­வது ஒன்றை நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் வீட்­டில் செய்­தா­லும் அல்­லது அக்­கம் பக்­கத்­தில் செய்­தா­லும் அல்­லது பரந்த அள­வில் சமூ­கத்­தில் செய்­தா­லும் எல்­லா­ரை­யும் ஒன்­றி­ணைத்து செயல்­பட்டு ஒரு நல்ல திட்­டத்தை தீட்டி பொது­வான இலக்­கு­டன் பாடு­பட்­டால் ஏரா­ள­மா­ன­வற்றை நாம் சாதிக்க முடி­யும் என்று தான் நம்­பு­வ­தாக துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

ஈஸ்ட் கோஸ்ட் பகு­தி­யில் 190,000 மக்­கள் வசிக்­கி­றார்­கள். அவர்­களில் 10ல் நான்கு பேருக்கு வயது 50 மற்­றும் அதற்­கும் மேல்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களான பிர­த­மர் அலுவ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான், துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ், திரு­வாட்டி ஜெசிக்கா டான், திரு­வாட்டி செரில் சான் ஆகி­யோர் அந்த அடிப்படைத் திட்­டத்தை விவ­ரித்­த­னர்.

இந்­தத் தொகு­தி­யில் நடப்­புக்கு வரக்­கூ­டிய பல்­வேறு செயல் திட்­டங்­க­ளைப் பற்றி அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். மக்­க­ளைச் சேர்த்து அவர்­களுக்குப் பயிற்சி அளித்து தொண்டூ­ழி­யர் கட்­ட­மைப்பு பலப்­படுத்­தப்­படும்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரி­டம் இருந்து கற்­றுக்­கொள்­ள­வும் வளங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சமூ­கச் சேவை­களைப் பெற­வும் ஏது­வாக பரா­ம­ரிப்­பா­ளர் ஆத­ரவுக் கட்­ட­மைப்பு ஒன்­றும் அமைக்­கப்­படும்.

மக்கள்தொகை மூப்படைவதால் நினைவாற்றல் இழப்பு நோய் பற்றிய கவலை அதிகரித்து வருகிறது.

ஆகையால் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியை இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்குத் தோதான நகராக ஆக்குவதற்கான திட்டங் களும் இருக்கின்றன.

நினை­வாற்­றல் குறைவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்­ளோ­ருக்கு வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்த எவை எவற்­றைச் செய்­ய­லாம் என்­பதன் தொடர்பில் வீடு வீடா­கக் கணக்­கெ­டுப்பும் நடத்தப்படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வயது ஆக ஆக மக்களைத் துடிப்போடும் உடல்நலத்தோடும் வைத்திருக்க பல உதவிகளைச் செய்ய வேண்டியது முக்கியமானது என்பதை துணைப் பிரதமர் திரு ஹெங் வலியுறுத்தி கூறினார்.