உயிர் துறப்புச் சம்பவங்களைத் தவிர்க்க மெய்நிகர் பெருநடை

உயிர் துறப்புச் சம்பவங்களைத் தவிர்க்க மெய்நிகர் பெருநடை

2 mins read
711fc382-b699-4799-baea-817f84bde3ff
படம்: HOWRU.SG -

உயிர் துறப்புச் சம்­ப­வம் ஒன்று நிகழ்ந்­தால் அதைத் தொடர்ந்து குறைந்­த­பட்­சம் இதர ஆறு பேர் பாதிக்­கப்­ப­டு­கிறார்­கள் என்று மதிப்­பி­டப்­படுகிறது.

ஆகை­யால் மன ரீதியில் பாதிக்­கப்­பட்டு இருப்­போ­ருக்­குத் தேவைப்­படும் அவ­சர ஆத­ரவை வழங்­க­வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மானது. அது­வும் இந்த கொவிட்-19 சூழ­லில் இந்த ஆத­ரவு இன்­னும் முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் அபய ஆலோ­சனைச் சங்கம் என்ற அமைப்­பின் முதலாவது மெய்­நி­கர் பெரு­நடை நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்து அதி­பர் உரை­யாற்­றி­னார்.

மக்­கள் தங்­க­ளைத் தாங்­களே மாய்த்­துக்கொள்­வ­தைத் தடுக்­கும் நோக்­கத்­து­டன் உல­கில் ஆண்­டு­தோ­றும் செப்­டம்­பர் மாதத்­தில் உயிர் மாய்ப்­புத் தடுப்பு புரிந்­து­ணர்வு மாதம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது.அதையொட்டி இந்­தப் பெரு­நடைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மெய்­நி­கர் பெரு­நடை இம்­மா­தம் 20ஆம் தேதி­ வரை நடக்­கும். தனி­மை­யாக அல்­லது ஒதுக்­கப்­பட்டு­விட்­ட­தாக உணர்­கின்ற மக்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருக்­கிறோம் என்­பதை மக்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு தெரி­யப்­ப­டுத்­த­லாம்.

இதில் பங்­கெ­டுப்­போர் மொத்­த­மாக 5.5 மில்­லி­யன் கால­டி­களை எடுத்­து­வைத்து ஆத­ரவை புலப்­படுத்­துவர் என்று இந்தச் சங்கம் நம்­பு­கிறது.

தங்­க­ளைத் தாங்­களே மாய்த்­துக்கொள்­ளும் சிந்­த­னை­யு­டன் இருப்­ப­வர்­கள் அல்­லது அத்­த­கைய சம்­ப­வங்­கள் மூலம் பாதிக்­கப்­பட்டு உள்­ள­வர்­க­ளுக்கு உதவ வச­தி­யாக இந்த நிகழ்ச்சி மூலம் $150,000 திரட்­டு­வது இச்சங்கத்தின் இலக்கு.

மெய்­நி­கர் பெரு­ந­டை­யில் பங்­கெ­டுக்க விரும்­பு­வோர் www.howru.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் இலவசமாக பதிந்து கொள்ள லாம். 42Race Running & Fitness Club என்ற செய­லி­யில் கால­டி­கள் எண்­ணிக்­கை­யைத் தாக்­கல் செய்­ய­லாம். இந்த இணை­யத்­த­ளம் வழி­யாக நன்­கொடை வழங்­க­லாம்.

பெரு­நடை ஒரு­பு­றம் இருக்க, வாரம் முழு­வ­தும் அன்­றா­டம் இணைய நிகழ்ச்­சி­கள் பல­வும் நடக்­கும். மன நலம் தொடர்­பான குழு விவா­திப்­பு­கள், மன உளைச்­ச­லைச் சமா­ளிப்­பது பற்­றிய கலந்­து­ரை­யாடல், நாட­கம் பல­வும் இவற்­றில் அடங்­கும். இந்தச் சங்கத்­தின் சமூக ஊட­கப் பக்­கங்­களில் மேல் விவ­ரங்­க­ளைக் காண­லாம்.

பெரு­நடை தொடக்க நிகழ்ச்சி நேர­டி­யாக நேற்று ஃபேஸ்புக்­கில் ஒளி­யேற்­றப்­பட்­டது. இந்தச் சங் கத்தின் புர­வ­ல­ரான கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அதில் கலந்­து­கொண்­டார்.

இப்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் சமூகத்­தின் மன நலத் தேவை­கள் உச்­சத்­தைத் தொட்­டுள்­ளன.

எடுத்­துக்­காட்­டாக இந்தச் சங்கத்தின் 24 மணி நேர நேரடி தொலை­பேசி மூலம் கடந்த மார்ச் முதல் மே வரை தொடர்­பு­கொண்­ட­வர்­கள் எண்­ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஏறக்­கு­றைய 25% கூடி இருக்­கிறது என்று அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.