வேலை தேடுவதற்கு முன் செய்ய வேண்டியவை: நிபுணர்களின் ஆலோசனை

வேலை தேடு­வ­தற்கு முன் உங்­க­ளது பலம் என்ன பல­வீ­னங்­கள் என்ன என்­பதை முத­லில் ஆராய வேண்­டும்.

Psychometric Tests போன்ற சோத­னை­களில் ஈடு­பட்டு இவற்­றைக் கண்­ட­றி­ய­லாம்.

குறிப்­பிட்ட ஒரு வேலைக்கு விண்­ணப்­பம் செய்­வ­தற்கு முன்­பாக, எதற்­காக அந்த வேலைக்கு விண்­ணப்­பிக்­கி­றேன், என்­னு­டைய பண்பு நலன்­கள் இந்த நிறு­வ­னத்­து­டன் ஒத்­துப்­போ­குமா போன்ற கேள்­வியை உங்­க­ளையே நீங்­கள் கேட்­டுக்­கொள்­ளுங்­கள்.

இவ்­வாறு செய்­யும்­போது உங்­க­ளது விருப்­பத்­திற்­கும் வளர்ச்­சிக்­கும் ஏற்ற வேலைக்­குத்­தான் நீங்­கள் விண்­ணப்­பிக்­கி­றீர்­கள் என்­பதை உறுதி செய்ய முடி­யும்.

தற்­போ­தைய சூழ­லில் நிரந்­தர வேலை கிடைப்­பது சிர­ம­மாக இருக்க, வேலைப் பயிற்­சித் திட்­டங்­கள் அல்­லது படிப்­புக்கு தொடர்­பில்­லாத வேலையை மேற்­கொள்ள முன்­வ­ர­லாம்.

இவ்­வாறு செய்­யும்­போது வேலை அனு­ப­வம் கூடு­கிறது. பொரு­ளா­தா­ரம் மேம்­பட்­ட­தும் இந்த வேலை அனு­ப­வத்­தைப் பயன்­ப­டுத்தி மற்ற வேலை­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

வேலைப் பயிற்­சித் திட்­டத்­தில் சேர்­ப­வர்­க­ளுக்­குப் பயிற்­சிப் படித்­தொகை வழங்­கப்­படும். இதன் வழி ஓர­ளவு நிதி ஆத­ர­வும் கிடைக்­கும்.

வேலைக்கு விண்­ணப்­பம் செய்­யும்­போது உங்­க­ளுக்கு எத்­த­கைய திறன்­கள் உள்­ளன, அவை எவ்­வாறு நீங்­கள் பணி­செய்ய இருக்­கும் நிறு­வ­னத்­திற்கு உத­வும் என்­பதை ஆரா­ய­வும்.

எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்

திட்­டம் (SGUnited Jobs and Skills Package) வழி பல வேலை­கள், வேலைப் பயிற்­சித் திட்­டங்­கள், திறன் மேம்­பாட்டு வாய்ப்­பு­கள் உள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை பல துறை­களை வெகு­வா­கப் பாதித்­துள்­ளது.

இருப்­பி­னும், மின்­வர்த்­த­கம், உற்­பத்தி, தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பம், சுகா­தா­ரச் சேவை­கள், சமூக சேவை­கள், நிதிச் சேவை­கள் ஆகிய துறை­களில் நல்ல வேலை வாய்ப்பு கள் உள்­ளன.

இது உங்­க­ளுக்­குப் பழக்­கப்­பட்ட துறை இல்லை என்­றா­லும் பரந்த மனப்­பான்­மை­யு­டன் புதிய பணி­களை மேற்­கொள்ள முன்­வ­ர­லாம்.

வேலை தேடு­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டால் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி வேலை வாய்ப்பு வழி­காட்­டியை (Career Coach) சந்­திக்­கப் பதிவு செய்­ய­லாம்.

உங்­க­ளது பட்­டப்­ப­டிப்பு பாடத்­திட்­டத்­தில் எல்­லாத் துறை­க­ளுக்­கும் பொருந்­தும் ஆராய்ச்­சித் திறன், எழுத்­துத் திறன், பேச்­சுத் திறன் போன்ற பொது­வான திறன்­களும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆத­லால், படிப்­புக்கு தொடர்­பில்­லாத வேலை வாய்ப்­பு­க­ளை­யும் பரி­சீ­லிக்க முன்­வ­ர­வும்.

குறிப்­பு­கள் வழங்­கி­ய­வர்:

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி வேலை வாய்ப்பு வழி­காட்டி

திரு­மதி விமலா ராம­சாமி (படம்).

படம்: சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு

வேலை தேடும் இளம் பட்டதாரி­க­ளுக்கு Diamond Glass Enterprise நிறு­வ­னக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு கேச­வன் சத்­தி­ய­மூர்த்தி, 41, ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

“வேலைச் சந்தை முன்பை போல் இருக்­காது என்­பதை இளம் பட்­ட­தா­ரி­கள் உணர வேண்­டும்.

“சம்­பள எதிர்­பார்ப்­பு­க­ளை­கு­றைத்­துக்­கொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

“ஆட்­கு­றைப்­பு­களும் அதிகரித்து வரும் வேளை­யில், வேலை தேடு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்­து­உள்­ளது.

“வேலை அனு­ப­வம் கொண்ட பலர் இளம் பட்­ட­தா­ரி­க­ளு­டன் வேலைக்­கா­கப் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

“இத­னால் இளம் பட்­ட­தா­ரி­கள் தங்­க­ளது தனித்­து­வத்தை வெளிக்­காட்ட முயற்சி எடுக்க வேண்­டும்.

“வேலை நேர்­மு­கத் தேர்­வு­களில் சிறப்­பாக செய்ய பயிற்சி எடுக்­க­வேண்­டும்.

“நேர்­மு­கத் தேர்­வு­களில் நிறு­வன அதி­கா­ரி­க­ளைக் கவ­ரும் வகை­யில் பேச­ வேண்­டும். திறன் மேம்­பாட்டு பயிற்­சி­களில் ஈடு­படு­வது அவ­சி­யம்.

“தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கு ஏற்­ற­வாறு இளை­ஞர்­கள் தங்­க­ளது அறி­வாற்­ற­லை­யும் திறன்­க­ளை­யும் மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும்.

பயிற்சி வகுப்­பு­கள், இணை­யக் கருத்­த­ரங்­கு­கள் என பல்­வேறு வழி­களில் புத்­தாக்­கத் திற­னை­யும் பங்­கா­ளித்­து­வ­த்தை­யும் அதி­க­ரித்­துக்­கொள்ளத் தயா­ராக இருக்க வேண்­டும். இது­போன்ற பல திறன்­வாய்ந்­த­வர்­க­ளையே நிறு­வ­னங்­கள் விரும்­பு­கின்­றன,” என்­றார் திரு கேச­வன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!