தனியே தவிக்க விடப்பட்ட பூனைகள்; அதிகாரிகள் விசாரணை

மார்சிலிங் டிரைவ் சாலையின் புளோக் 17ன் கீழ்த்தளத்தில் ஒன்பது பூனைகள் ஆதரவின்றித் தனியே விடப்பட்ட  சம்பவத்தை விலங்கு மற்றும் விலங்கு மருத்துவ சேவை விசாரித்து வருகிறது.

ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று இவ்வாறு பூனைகள் விடப்பட்டதைக் கண்ட நூர் என்பவர் ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

“புளோக் வெற்றுத்தளங்களில் வழக்கமாக உலாவும் வேறு சில பூனைகளுக்கு உணவு கொடுக்கும் ஒருவர் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்,” என்று நூர் கூறினார். “இதே புளோக்கில் தங்கியிருக்கும் ஒருவர் தமது பூனைகளை இவ்வாறு விட்டுச் சென்றிருக்கலாம் என எண்ணுகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

செல்லப் பிராணிகளை நிராதரவாக விட்டுச் செல்வோருக்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம், 12 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon