துல்லிய பொறியியல் துறையில் ஏப்ரல் முதல் 1,000 வேலைகள்

எஸ்ஜி யுனை­டெட் வேலை தேர்ச்­சித் திட்­டத்­தின் கீழ் கடந்த ஏப்­ரல் முதல் துல்­லிய பொறி­யி­யல் துறை­யில் ஏறக்­கு­றைய 1,000 வேலை­கள் கிடைத்­துள்­ளன.

அந்த வேலை­களில் ஐந்­தில் ஏறக்­குறைய நான்கு வேலை­கள், நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள், தொழில்நுட்பர் கள் (பிஎம்­இடி) ஆகி­யோ­ருக்கு உரி­ய­வை­யாக இருந்­தன.

பிஎம்­இடி ஊழி­யர்­கள் சுமார் 750 பேர் உற்­பத்­தித்­துறை பொறி­யா­ளர்­கள், மின் மற்­றும் மின்­னி­யல் பொறி­யா­ளர்­கள், தர உத்­த­ர­வாத பரி­சோ­தனை அதி­கா­ரி­கள் போன்ற பதவி­களில் அமர்ந்­த­னர். உற்­பத்­தித்­துறை ஊழி­யர்­கள், பற்ற வைப்­ப­வர்­கள், குழாய் பொருத்­து­ப­வர்­கள் போன்ற வேலை­களில் 230 பேர் சேர்ந்­த­னர்.

இவை ஒரு­பு­றம் இருக்க, துல்­லிய பொறி­யி­யல் துறை­யில் சுமார் 440 பயிற்சி வாய்ப்­பு­களும் வேலை­யிட பயிற்­சி­யும் நிறு­வ­னங்­க­ளின் உத­வி­யு­டன் உரு­வாக்­கித் தரப்­பட்­டன. இவற்­றில் பிஎம்­இடி ஊழி­யர்­க­ளுக்கு 360 வேலை­களும் மற்­ற­வர்­க­ளுக்கு 80 வேலை­களும் கிடைத்­தன. 80 பயிற்சி வாய்ப்­பு­களில் 60 பிஎம்­இடி ஊழி­யர்­களுக்­கும் 20 மற்­ற­வர்­க­ளுக்­கும் சென்­றன.

துல்­லிய பொறி­யி­யல் துறை­யில் பிஎம்இடி வேலை­க­ளுக்­கான சம்­ப­ளம் ஒவ்­வொரு வேலை­யின் இயல்பை பொறுத்­தும் தேவைப்­படும் தேர்ச்­சி­க­ளைப் பொறுத்­தும் மாறு­பட்டு இருக்­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, தொழில்­துறை மற்­றும் உற்­பத்­தித் துறை பொறி­யா­ளர்­கள் மாதம் $2,600 முதல் $6,000 வரை சம்­பா­திக்­கக்­கூ­டும். உற்­பத்­தித் துறை­யைச் சேர்ந்த பொறி­யி­யல் நிபு­ணர்­கள் $1,500 முதல் $2,350 வரை ஊதி­யம் பெறக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

இத­னி­டையே, எஸ்ஜி யுனை­டெட் வேலை மற்­றும் தேர்ச்சித் திட்­டத்­தின் வழி­யாக துல்­லிய பொறி­யி­யல் துறை­யில் 260க்கும் அதி­கம் பேர் இந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் ஜூலை வரை வேலை­களைப் பெற்று இருக்­கி­றார்­கள் என்­பதை மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தன்­னு­டைய வாராந்­திர வேலைச் சூழல் அறிக்­கை­யில் சுட்­டி­னார்.

இப்­படி வேலை பெற்­ற­வர்­களில் ஐந்து பேரில் இரண்டு பேர் ஒரு தொழில்­து­றையை விட்டு வேறு ஒரு தொழில்­து­றைக்கு மாறி­ய­வர்­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஏப்­ரல் முதல் 30க்கும் அதி­க­மா­னோர் நிறு­வ­னங்­களின் ஆத­ர­வு­டன் பயிற்சி வாய்ப்பு­க­ளை­யும் வேலை­யிட அனு­பவ வாய்ப்­பு­களை­யும் பெற்­ற­னர்.

இந்­தத் தொழில்­து­றைக்கு வந்த புதி­ய­வர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் வாழ்க்­கைத் தொழில் மாற்­றுச் செயல் திட்­டம் மூலம் அவர்­கள் உதவி பெறு­கி­றார்­கள்.

கொவிட்-19 கார­ண­மாக நில­வ­ரங்­கள் சரி­யில்லை என்­றா­லும் துல்­லிய பொறி­யியல் துறை இந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூலை வரை 11.4 விழுக்­காடு வளர்ந்து உள்ளதையும் அமைச்­சர் சுட்­டினார்.

இத்துறையில் மருத்­துவத் தொழில்­நுட்பம், கணி­னிச் சில்லு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் சிறப்­பா­கச் செயல்­பட்டு இருக்­கின்­றன.

திரு டிம் டான், 56, என்­ப­வர் துல்­லிய பொறி­யி­யல் து­றைக்­குப் புதி­ய­வர். முன்பு இவர் எண்­ணெய் மற்­றும் எரி­வாயு தொழில்­து­றை­யில் வேலை பார்த்­தார்.

வேலை இழந்­த­வர்­க­ளுக்­குப் பொருத்­த­மான வேலை­யைப் பார்த்துத் தரும் அரசு திட்­டத்­தின் உத­வி­யு­டன் இவர் முப்­ப­ரி­மாண அச்சு சேவைத் துறை­யில் செயல்­முறை நிர்­வா­கி­யாக சேர்ந்­தார். பிறகு இவர் ஆறுமாத நிபுணத்துவ வாழ்க்கைத் தொழில் மாற்றச் செயல் திட்டத்தில் சேர்ந்து தயா ரிப்புத் துறை பொறியாளராக ஆனார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon