முதலாவது தடையில்லா அறிவார்ந்த கார் நிறுத்தம்

முதலாவது தடையில்லா அறிவார்ந்த கார் நிறுத்தம்

1 mins read
27dae20b-1f4e-4aaa-b8bd-cf0ecfd8ef18
கார் நிறுத்தங்களில் தங்களின் வாகனத்தை நிறுத்த இடம் உள்ளதா, அதற்கான கட்டணம் போன்ற விவரங்களை வாகனத்தில் இருந்தவாறே தெரிந்துகொள்ளலாம். படம்: என்டியு -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் (என்­டியு) எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­ன­மும் இணைந்து சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது தடை­யில்லா அறி­வார்ந்த கார் நிறுத்­தத்தை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தின.

இதன் மூலம் என்­டியு வளா­கத்­தின் எந்த கார் நிறுத்­தத்­தி­லும் கார் நிறுத்­து­வது எளி­தாக்­கப்­பட்­டுள்­ளது.

டிக்­கெட் இல்­லாத, தடை­யில்­லாத இந்த அறி­வார்ந்த கார் நிறுத்­தும் முறையை எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், 'கோபார்­கின்' கைபே­சிச் செய­லி­யு­டன் இணைந்து உரு­வாக்­கி­யுள்­ளது.

காரின் பதிவு எண்­ணைத் தானா­கக் கண்­ட­றி­தல், தர­வுப் பகுப்­பாய்வு, நக­ரும்­போதே கட்ட ணத்­தைச் செலுத்­தும் முறை ஆகி­வற்றை இந்­தப் புதிய திட்­டத்­தின்­படி செயல்­ப­டுத்த முடி­யும்.

"புதிய அறி­வார்ந்த கார் நிறுத்­தத் தளம் அன்­றாட வாழ்க்­கையை மேம்­ப­டுத்த தொழில்­நுட்­பம் சார்ந்த தீர்­வு­க­ளைப் பயன்­ப­டுத்த புத்­தாக்­கம் எந்த அள­வுக்கு உத­வு­கிறது என்­பது நல்ல உதா­ர­ணம். இந்த அறி­வார்ந்த கார் நிறுத்த முறை­யால் எங்­கள் வளா­கத்­துக்கு வரும் வரு­கை­யா­ளர்­க­ளின் பயண அனு­ப­வ­மும் மேம்­படும்," என்­றார் என்­டி­யு­வின் தலை­வர் பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரேஷ்.

இந்த வச­தி­யைப் பயன்­ப­டுத்த வாக­ன­மோட்­டி­கள் 'கோபார்­கின்' கைபே­சிச் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்ள வேண்­டும். அதில் கடன்/பற்று அட்­டை­யின் விவ­ரங்­க­ளைப் பதிவு செய்ய வேண்­டும்.

அரு­கில் உள்ள கார் நிறுத்­தம் அங்கு கார் நிறுத்த எவ்­வ­ளவு கட்­ட­ணம் என்­பதை கைபே­சிச் செயலி மூலம் தெரிந்­து­கொள்­ள­லாம். இது கார் நிறுத்­தத்­தைத் தேடும் நேரத்­தைக் குறைக்­கும்.

இது­வரை என்­டி­யு­வின் பிர­தான ஜூரோங் வளா­கத்­தின் மூன்று கார் நிறுத்­தங்­களில் இந்த முறை பயன்­பாட்­டில் உள்­ளது.