சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்தினர் மறுநியமனம்

சமய நல்­லி­ணக்­கத்­துக்­கான அதி­பர் மன்­றத்­தின் உறுப்­பி­னர்­கள் பத்து பேரும் மேலும் மூன்று ஆண்­டு­களுக்கு மன்­றத்­தில் அங்­கம் வகிக்க மறு­நி­ய­ம­னம் பெற்­றுள்­ள­னர். அந்­தப் பத­விக்­கா­லம் நேற்­றி­லி­ருந்து தொடங்­கி­யது.

உச்ச நீதி­மன்­றத்­தின் நீதி­பதி சாவ் ஹிக் டின், மன்­றத்­தின் தலை­வ­ரா­கத் தொடர்ந்து செயல்­ப­டு­வார்.

சமய நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் இந்த மன்­றம் உரு­வாக்­கப்­பட்­டது. அதன் உறுப்­பி­னர்­கள் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பால் நிய­மிக்­கப்­பட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் சமய நல்­லி­ணக்­கம் தொடர்­பில் உள்­துறை அமைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­து­தான் சமய நல்­லி­ணக்­கத்­துக்­கான அதி­பர் மன்­றத்­தின் முக்­கிய பணி.

சிங்­கப்­பூ­ரின் முஃப்தி டாக்­டர் நஸி­ரு­டின் முகம்­மது நசிர், சிங்­கப்­பூர் ரோமன் கத்­தோ­லிக்க பேரா­யர் வில்­லி­யம் கோ, சிங்­கப்­பூர் பௌத்த சம்­மே­ள­னத்­தின் தலை­வர் தவத்­திரு செக் குவாங் பிங், சிங்­கப்­பூர் தேவா­ல­யங்­கள் மன்­றத்­தின் முன்­னாள் தலை­வரான ஓய்­வு­பெற்ற கௌரவ ஆயர் வீ பூன் ஹப், சிங்­கப்­பூர் சீக்­கி­யர் வாரி­யத்­தின் தலை­வர் திரு சுர்­ஜித் சிங், சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக தொழில் சபை­யின் முன்­னாள் தலை­வர் திரு எம். ராஜா­ராம், சிங்­கப்­பூர் தாவோ­சிய சம்­மே­ள­னத்­தின் ஆலோ­ச­கரான பேரா­சி­ரி­யர் லீ சியுக் இன், உச்ச நீதி­மன்­றத்­தின் தலைமை நீதி­பதி அலு­வ­ல­கத்­தின் தலைமை நிர்­வாகி ஜுதிகா ராம­நா­தன், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வர் பேரா­சி­ரி­யர் லில்லி கோங் ஆகி­யோரே மன்­றத்­தின் பத்து உறுப்­பி­னர்­க­ளா­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!