மெடிசேவ் மோசடி: பல்மருத்துவப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட 2வது பல்மருத்துவர்

மெடிசேவ் மோசடியின் தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பல்மருத்துவர் டேனியல் லியூ யாவோசியாங், பல்மருத்துவர்களுக்கான அதிகாரபூர்வ பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் பல்மருத்துவ மன்றத்தில் நடத்தப்பட்ட ஒழுங்குமுறை விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து திரும்பிய பிறகு அவர் பல்மருத்துவராகப் பணியைத் தொடர இயலாது.

தி ஸ்மைல் டிவிஷன் டென்டல் குழுமத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் லியூ.

முன்னாள் தேசிய நீச்சல்வீரரான லியூ, பல்மருத்துவ பதிவுச் சட்டத்தின் கீழ், நேர்மையின்றி குற்றச் செயலில் ஈடுபட்டதாக 7 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

சிகிச்சை செய்யாதபோதும் மத்திய சேமநிதிக் கழகத்திடமிருந்து பணத்தை எடுக்க சதி செய்ததாகக் கூறப்பட்டது. 7 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

13 நோயாளிகளிடமிருந்து $388,700 மோசடி செய்ததற்காக லியூவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon