18 வயதை எட்டிய சிங்கப்பூரர்களுக்கு $100க்கான மின்னிலக்க பற்றுச்சீட்டு

இவ்வாண்டு 18 வயதை எட்டுவோர் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் $100 மதிப்பிலான மின்னிலக்க பற்றுச்சீட்டுகளைப் பெறுவர். ஹோட்டல்களில் தங்குவதற்கு, உள்ளூர் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கு அந்தப் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

இந்த SingapoRediscovers பற்றுச்சீட்டுகளை சிங்பாஸ் மூலம் டிசம்பர் மாதத்திலிருந்து  அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பயன்படுத்தலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆறு நுழைவுச்சீட்டுகளை இத்தகைய கேளிக்கை அம்சங்களுக்காக மலிவு விலையில் வாங்கலாம். அந்த நுழைவுச்சீட்டுகள் ஒவ்வொன்றுக்கும் $10 கழிவு பெறலாம்.

இதனை இன்று (செப்டம்பர் 16) அறிவித்த வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், இவ்வாண்டு டிசம்பர், அடுத்தாண்டு ஜூன் விடுமுறைக் கலத்தில் இந்தப் பற்றுச் சீட்டுகளைப்  பயன்படுத்த ஏதுவாக இந்தத் திட்டத்துக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், இந்தத் திட்டம் ஒரு சமுதாய உதவித் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon