அறிவார்ந்த நகர தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இரு அமைப்புகள்

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மும் எஸ்டி எஞ்­சி­னி­ய­ரிங் நிறு­வ­ன­மும் $9 மில்­லி­யன் மதிப்­பி­லான ஆராய்ச்­சித் திட்­டத்­திற்­கான ஒத்­து­ழைப்­பில் ஈடு­பட்டு உள்­ளன.

சிங்­கப்­பூ­ரி­லும் உல­க­ள­வி­லும் அறி­வார்ந்த நக­ரங்­களை உரு­வாக்­கு­வ­தன் தொடர்­பில் எழும் பிரச்­சி­னை­க­ளுக்­கத் தீர்வு காணும் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான இந்த ஆராய்ச்சி பல ஆண்டு காலம் நீடிக்­கும்.

இரண்டு ஆராய்ச்­சித் திட்­டங்­க­ளு­டன் நட­வ­டிக்­கை­கள் தொடங்­கும். நக­ரப் போக்­கு­வ­ரத்து நிர்­வ­கிப்பு, நிறு­வன மின்­னி­லக்­கத்­த­ளம் ஆகிய திட்­டங்­கள் அவை.

நக­ரப் போக்­கு­வ­ரத்து நிர்­வ­கிப்பு என்­பது தர­வு­க­ளை­யும் காணொளி பகுப்­பாய்­வு­க­ளை­யும் பயன்­ப­டுத்தி போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைப்­பது மீது கவ­னம் செலுத்­தும்.

போக்­கு­வ­ரத்து நில­வர மதிப்­பீடு, முன்­னு­ரைப்பு ஆகிய தீர்­வு­க­ளின் வழி போக்­கு­வ­ரத்து நெருக்­கடி பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­களை ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கோரு­வர்.

தானி­யக்க வாக­னத் தொழில்­நுட்­பம், 5ஜி உள்­கட்­ட­மைப்பு, இயந்­தி­ரத்­திற்கு இயந்­தி­ரம் இடை­யி­லான தொழில்­நுட்­பங்­கள் போன்ற எதிர்­கால அம்­சங்­களை இத்­திட்­டம் கொண்­டி­ருக்­கும்.

அடுத்த ஆய்­வுத் திட்­ட­மான நிறு­வன மின்­னி­லக்­கத் தளம் என்­பது நீக்­குப்­போக்­கான, அள­வி­டக்­கூ­டிய செயற்கை நுண்­ண­றித்­த­ளத்­தைக் குறிக்­கும்.

இணை­யப் பாது­காப்பு, தரவு, வன்­பொ­ருள் போன்­ற­வற்­றில் நக­ரங்­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் உள்ள பல்­வேறு தேவை­களை இந்த மின்னிலக்கத் தளம் ஒருங்­கி­ணைக்­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon