சுடச் சுடச் செய்திகள்

வாகனங்கள் மோதிக்கொண்டது பற்றி போலிஸ் விசாரணை

எஸ்எம்ஆர்டி பேருந்தும் குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றும் நேற்று முன்தினம் காலையில் மோதிக்கொண்டன.

பவுண்டரி ரோட்டை நோக்கிய அங் மோ கியோ அவென்யூ 1ல் காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கக் கதவு பலத்த சேதமடைந்ததோடு அதன் கண்ணாடிகள் நொறுங்கின.

பேருந்து ஓட்டுநரும் நான்கு பயணிகளும் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவர்கள் சுயநினைவோடு இருந்ததாகவும் எஸ்எம்ஆர்டி பேச்சாளர் கூறினார்.

பயணிகள் 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றார் அவர். விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon