கொவிட்-19: தடை செய்யப்பட்ட காலத்தில் ஒன்றுகூடிய 11 பேருக்கு $25,200 அபராதம்

கொவிட்-19: தடை செய்யப்பட்ட காலத்தில் ஒன்றுகூடிய 11 பேருக்கு $25,200 அபராதம்

2 mins read

கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்­று­கூ­டிய குற்­றத்­திற்­காக நேற்று 11 ஆட­வர்­க­ளுக்கு நீதி­மன்­றத்­தில் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. மொத்த அப­ரா­தத் தொகை $25,200.

ஏப்­ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை திட்­டம் நடப்­பில் இருந்­த­போது முறை­யான கார­ண­மின்றி வீட்­டி­லி­ருந்து வெளி­யே­ற­வும் ஒரே பகு­தி­யில் வசிக்­கா­த­வர்­கள் சமூ­கக் கார­ணங்­க­ளுக்­காக நேரில் சந்­திக்­க­வும் தடை விதிக்­கப்­பட்டு இருந்­தது.

தடையை மீறி இவற்­றைச் செய்­வது கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின்­கீழ் குற்­றம் என அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

ஈஸ்ட்பே கொண்­டோ­மி­னி­யத்­தில் ஒன்­று­கூ­டிய குற்­றத்தை 11 ஆட­வர்­களும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

அப்­பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அருகே டே லியன் டெக் ரோட்­டில் உள்ள அந்த கொண்­டோ­மினிய வீட்டில் ஒன்­று­கூ­ட­லுக்கு ஏற்­பாடு செய்­ததற்காக அலெக்ஸ் டியோ யான் யுவான், 27, என்­ப­வ­ருக்கு ஆக அதி­க­மாக $3,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஒன்­று­கூ­டல் நிகழ்­வில் பங்­கேற்ற டியோ வீ லியாங், 27, என்­ப­வ­ருக்கு $2,700 அப­ரா­த­மும் இதர மூவ­ருக்கு தலா $2,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன. இவர்­கள் தவிர 23 வயது முதல் 35 வயது வரை­யி­லான ஆறு பேருக்கு தலா $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. 12வது நபர் தொடர்­பான வழக்கு விசா­ரணை இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது.

அவ­ரது வழக்­கிற்கு முந்­திய கலந்துரையாடல் அக்­டோ­பர் 15ஆம் தேதி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின்­கீழ் முதல்­முறை குற்­றம் புரி­வோ­ருக்கு ஆறு மாதம் வரை­யி­லான சிறை, $10,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன தண்­ட­னை­க­ளாக விதிக்­கப்­ப­ட­லாம்.

மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $20,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்க முடி­யும்.