கொவிட்-19க்கு எதிரான போரில் கைகொடுக்கும் வைட்டமின் டி; சிங்கப்பூரில் 30% மக்களிடம் அதில் குறைபாடு

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்த்­துப் போரா­டு­வ­தில் வைட்­ட­மின் டி கைகொடுப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, சூரிய ஒளியிலிருந்து நமது உடலே நமக்குத் தேவையான வைட்டமின் டியை தயாரித்துக்கொள்ளும். அதனாலேயே சூரிய ஒளி நம் தோலின் மீது படும்படி தினமும் சிறிது நேரம் இருப்பது நல்லது என்பர்.

ஆனால், சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கட்டடங்களின் உள்ளே வேலை செய்பவர்களாக இருப்பதால், இங்கு இருப்போரில் 32.9 விழுக்காட்டினருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்­டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவௌ சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தைச் சேர்ந்த சத்­து­ணவு நிபு­ண­ரும் துணைப் பேரா­சி­ரி­ய­ரு­மான வெரேனா டான் எடுத்­துக்­காட்டி உள்­ளார்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்படுகிறது.

ஆனால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon