'ஓ' நிலைத் தேர்வுகளில் ஏமாற்ற மாணவர்களுக்கு உதவிய முன்னாள் தலைமை ஆசிரியர், துணைப்பாட ஆசிரியர்களுக்கு சிறை

முன்னாள் துணைப்பாட ஆசிரியர்களின் உதவியுடன், கடந்த 2016ஆம் ஆண்டின் ‘ஓ’ நிலைத் தேர்வில் ஆறு மாணவர்கள் தேர்வுகளில் ஏமாற்ற உதவிய தனியார் கல்வி நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 34ல் இயங்கிய சியூஸ் எடியுகேஷன் சென்டர் எனும் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் போ யுவான் நீ, 54, முன்னாள் துணை ஆசிரியர்களான அவரது உறவினரில் ஒருவரான ஃபியோனா போ மின், 33 மற்றும் ஃபெங் ரிவென், 28 ஆகிய மூவர் மீதும் மொத்தம் 27 மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர்கள் குற்றவாளிகளென ஜூலை 7ம் தேதியன்று உறுதியானது.

ஃபியோனா போவுக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் சீன நாட்டவரான ஃபெங்குக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நேற்று விதிக்கப்பட்டது.

நான்காம் குற்றவாளியான முன்னாள் துணைப்பாட ஆசிரியரான டான் ஜியா யான், 34 என்பவருக்கு சென்ற ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon