சூதாட்டக்காரர்களின் 1.36 பி. பணம் மாற்றிவிடப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த சட்ட நிறுவனம் நியமனம்

லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் சிங்­கப்­பூர் சூதாட்ட நிறு­வ­னம், சூதாட்­டக்­காரர்­க­ளின் US$1 பில்­லி­ய­னுக்­கும் அதிகமான பணத்தை மூன்­றாம் தரப்­பு­க­ளுக்கு ஊழி­யர் மாற்­றி­விட்ட விவ­கா­ரம் பற்றி புதி­தாக புலன்­விசா­ரணை நடத்த சட்ட நிறு­வ­னம் ஒன்றை அமர்த்தியுள்ளது.

இந்த விவ­கா­ரம் பற்றி தக­வல் தெரிந்­த­வர்­கள் இவ்­வாறு கூறி இருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது. சச்­ச­ர­வு­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தி­லும் அனைத்­து­லக சம­ர­சத் துறை­யி­லும் கவ­னம் செலுத்­தும் ‘தவிந்­தர் சிங் சேம்­பர்ஸ்’ என்ற சட்ட நிறு­வ­னம், அந்தக் காரணத்துக்காக நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தாக அந்­தத் தரப்­பு­கள் தெரி­வித்­துள்­ளன.

மரினா பே சேண்ட்­ஸில் மூன்றாம் தரப்பு பண மாற்­றங்­கள் தொடர்­பில் சிங்­கப்­பூர் போலிஸ் புலன்­விசாரணை தொடங்­கி­யதை அடுத்து அந்த நிய­ம­னம் இடம்­பெற்று இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வின் நீதித்­து­றை­யும் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­களும் அந்த விவ­கா­ரம் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள். இதில் இப்­போது சட்ட நிறு­வ­ன­மும் சேர்ந்­து­கொண்டு இருக்­கிறது.

சூதாட்­டக்கூட புர­வ­லர் ஒரு­வர், தனக்குத் தெரி­யா­மல் தன்­னு­டைய $9.1 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை இதர சூதாட்­டக்­கா­ரர்­களுக்கு மாற்றி­வி­டப்­பட்டு இருக்­கிறது என்று சென்ற ஆண்டு மரினா பே சேண்ட்ஸ் மீது வழக்குத் தொடுத்­தார். இந்த வழக்கு விவ­கா­ரம் நீதி­மன்­றத்­துக்கு வெளியே ஜூன் மாதம் தீர்த்­துக்­கொள்­ளப்­பட்­டது.

முழுப் பணத்­தை­யும் திருப்பித் தந்­து­வி­டு­வ­தாக மரினா பே சேண்ட்ஸ் ஒப்­புக்­கொண்­டது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பணம் மாற்­றி­வி­டப்­ப­டு­வ­தன் தொடர்­பில் பிரச்­சி­னை­கள் எழுப்­பப்­பட்டபோது அந்த விவ­கா­ரம் பற்றி நிறு­வ­னம் நூற்­றுக்கு நூறு மறு­ப­ரி­சீ­ல­னை செய்­தது. வாடிக்­கை­யா­ள­ரின் எண்­ணத்­துக்கு மாறாக எந்­த­வொரு வகை­யி­லும் அவ­ரின் பணம் மாற்றி­வி­டப்­ப­ட­வில்லை என்ற முடி­வுக்கு இந்த நிறு­வ­னம் வந்­தது.

மரினா பே சேண்ட்ஸ் நிறு­வ­னம் அதி­கா­ரி­க­ளு­டன் அணுக்­க­மாக தொடர்ந்து செய­லாற்றி இந்த நிறு­வ­னம், சட்ட விதி­மு­றை­களை மீறா­மல் நடப்­ப­தைக் கண்­கா­ணித்து வரும் என்­றும் அறிக்­கை­யில் அது தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, புர­வ­லர் ஒரு­வ­ரின் கணக்­கில் இருந்து அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் மரினா பே சேண்ட்ஸ் நிறு­வ­னம் பணத்தை மாற்­றி­விட்டு இருக்­கிறது என்று கூறப்­பட்­ட­தன் தொடர்­பில் தான் நடத்­திய புலன்­வி­சா­ர­ணை­யை முடித்­துக்­கொண்டு இருப்­ப­தாக சிங்­கப்­பூ­ரின் சூதாட்ட ஒழுங்­கு­முறை ஆணை­யம் புளூம்­பர்க் நியூஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தது.

மரினா பே சேண்ட்­ஸ் நிபந்­தனை கள் எதை­யும் மீற­வில்லை என்றாலும் பணத்தை மாற்­றி­வி­டு­வ­தன் தொடர்பிலான அந்த நிறு­வ­னத்­தின் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் பல­வீனங்­கள் இருப்­ப­தாக ஆணை­யம் அறிக்கை ஒன்­றில் கூறியது.

இத்­த­கைய காரி­யங்­க­ளைக் கடு­மை­யா­ன­தாக ஆணை­யம் கரு­து­கிறது. கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களைப் பலப்­ப­டுத்­து­மாறு மரினா சேண்ட்ஸ்க்கு ஆணை­யம் உத்­த­ர­விட்­டது.

அந்த உத்­த­ரவை மரினா சேண்ட்ஸ் அமல்­ப­டுத்தி இருக்­கிறது என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!