2020: சிங்கப்பூரின் கட்டுமானத் தேவை $10 பில்லியன் குறைப்பு

இந்த ஆண்­டிற்­கான கட்­டு­மா­னத் தேவை­ கணிப்­பில் $10 பில்­லி­யன் குறைக்­கப்­பட்டு இருக்­கிறது. கொடுக்­கப்­பட்ட ஒப்­பந்­தங்­கள், வர­வி­ருக்­கின்ற அர­சாங்­கம் மற்­றும் தனி­யார் துறை திட்­டங்­கள் ஆகி­ய­வற்றைப் பரி­சீ­ல­னை செய்­த­பி­றகு கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் அந்­தக் கணிப்­பைக் குறைத்து இருக்­கிறது.

இந்த ஆண்டு கட்­டு­மா­னத் தேவை $28 பில்­லி­யன் முதல் $33 பில்­லி­யன் வரை இருக்­கும் என்று கடந்த ஜன­வ­ரி­யில் கணிக்­கப்­பட்­டது. அந்­தக் கணிப்பு இப்­போது $18 பில்­லி­ய­னி­லி­ருந்து $23 பில்­லி­யன் வரை என்று குறைக்­கப்­பட்டு இருப்­ப­தாக இந்த ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. தனி­யார் துறை கட்­டு­மா­னத் தேவை குறைந்­ததே இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்டு வரும் பாதிப்­பு­களை மதிப்­பிடு­வ­தற்கு மேலும் கால­ அ­வ­கா­சம் தேவை என்று ஒப்­பந்­தக்­கா­ரர்­களும் பொருள் விநி­யோ­கிப்­பா­ளர்­களும் கேட்டு இருப்­ப­தால் சில அர­சாங்­கத் துறை திட்­டங்­கள் அடுத்த ஆண்­டுக்கு ஒத்­தி­போ­டப்­பட்டு இருக்­கின்­றன.

இந்த ஆண்­டிற்­கான அர­சாங்­கத் துறை ஒப்­பந்­தங்­க­ளின் கணிப்பு $11 பில்­லி­யன் முதல் $14 பில்­லி­யன் வரை இருக்­கும் என்­றும் தனி­யார் துறை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இது $7 பில்­லி­யன் முதல் $9 பில்­லி­யன் வரை இருக்­கும் என்­றும் கணக்­கி­டப்­பட்டு இருக்­கிறது.

இருந்­தா­லும் கட்­டு­மான தேவை­கள் 2021 முதல் ஓர­ள­வுக்கு மீட்சி காணுமென எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக கட்­டு­மா­னத் துறை முடங்­கிப்­போ­னது. அந்­தத் துறை படிப்­ப­டி­யாக மீண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், கொவிட்-19 கிருமி மறு­ப­டி­யும் தலை­தூக்­கா­த­வாறு விழிப்­பு­டன் இருந்து இந்­தத் துறை பார்த்­துக்கொள்­ள­வேண்­டும் என்று ஆணை­யம் சட்­டிக்­காட்டி உள்­ளது.

2021-2022க்கான கட்­டு­மா­னத் தேவை கணிப்பு பற்­றிய புதிய தகவல்­களை அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் இந்த ஆணை­யம் வெளி­யி­டும்.

இத­னி­டையே, கட்­டு­மா­னத் தொழில்­துறை நிலை­யான தொழில் மேம்­பாட்­டிற்­கான ஆற்­றலை பலப்­படுத்­திக்கொள்ள வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பதை உணர்ந்­து­கொண்டு இருப்­ப­தாக ஃபேஸ்புக் பக்­கத்­தில் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

இந்­தத் தொழில்­துறை மீண்­டும் தலை­தூக்­கத் தொடங்கி இருக்­கிறது என்­றா­லும் இது இன்­ன­மும் பல சவால்­களை எதிர்­நோக்கி உள்­ளது என்று அவர் கூறி­னார்.

அடுத்த ஆண்டு முதல் ஓர­ள­வுக்­குத் தேவை அதி­க­ரிக்­கும். பொதுத் துறை திட்­டங்­கள் அடுத்த ஆண்டு அதி­க­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!