சுடச் சுடச் செய்திகள்

வன்செயல்: பேருந்து முன்கள ஊழியருக்கு சட்ட உதவி

பொதுப் போக்­கு­வ­ரத்து பேருந்­து­களில் பணி­பு­ரி­யும் முன்­கள ஊழி­யர்­கள் தாக்­கப்­படும் சம்­ப­வங்­கள் அண்­மை­யில் அதி­க­ரித்­துள்­ளன.

இதைக் கருத்­தில் கொண்டு, அவர்­கள் விரும்­பி­னால் தவறு செய்­வோ­ருக்கு எதி­ராக சிவில் வழக்­குத்­ தொ­டுக்க ஏது­வாக அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு எஸ்­பி­எஸ் டிரான்­சிட் உத­வும்.

சட்­ட­பூர்வ பிர­தி­நி­தி­களை நிய­மிப்­பது, அவர்­க­ளுக்கு ஆகும் செலவை ஏற்­பது போன்ற உத­வி­கள் அவற்­றில் அடங்­கும். தன் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரான எத்­த­கைய சட்­ட­வி­ரோ­தச் செய­லை­யும் தான் சகித்­துக் கொள்­ளப்­போவ தில்லை என்று இந்த நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

குற்­ற­வி­யல் நீதி முறைக்கு அப்­பா­லும் சிவில் வழக்­கு­க­ளைத் தொடுத்து ஊழி­யர்­கள் தங்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காத்­துக் கொள்ள முற்­றி­லும் நிர்­வா­கம் உத­வும் என்று எஸ்­பி­எஸ் டிரான்­சிட் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின் முன்­கள ஊழி­யர்­கள் தாக்­கப்­படும் சம்­ப­வங்­கள் அண்­மை­யில் அதி­க­மாகி உள்­ளன. குறிப்­பாக முகக்­க­வ­சம் கட்­டா­ய­மாகி உள்ள இந்­தக் கால­கட்­டத்­தில் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரான வன்செயல்­ கூடி இருப்­ப­தாக நிறு­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முகக்­க­வ­சம் அணி­யா­மல் பேருந்­தில் ஏறிய ஒரு­வர் பேருந்து ஓட்டுநர் ஒரு­வ­ரைத் தாக்­கி­னார்.

முகக்­க­வ­சத்தை அணி­யும்­படி கூறிய பேருந்து ஓட்­டு­நர்­கள் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் கடந்த ஆகஸ்ட் மாதத்­தி­லும் நிகழ்ந்­தன.

இத­னி­டையே, இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளைக் கண்­டித்த எஸ்­பிஎஸ் டிரான்­சிட் இடைக்­கால தலைமை நிர்­வாகி செங் சியாக் கியான், இவை தடுக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

“எங்­கள் ஊழி­யர்­கள் அன்­றா­டம் வேலைக்­குச் சென்று விதி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் பணி­க­ளை­ உறுதியாகச் செய்­கிறார்­கள்.

“சரி­யான கட்­ட­ணத்­தை செலுத்­தும்­படி, முகக்­க­வ­சத்தை அணி­யும்­படி பய­ணி­க­ளி­டம் அவர்­கள் சொல்­லும்­போது அதைச் செய்­யா­மல் ஊழி­யர்­க­ளைத் திட்டு­வது, பெய­ரைச் சொல்லி கத்­து­வது, தாக்­கு­வது போன்­றவை எல்­லாம் தவ­றான செய்­கை­கள்,” என்று திரு செங் குறிப்­பிட்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon