அடுத்த இரு வாரங்களுக்கு மழை குறையக்கூடும்

1 mins read
3a18c74a-c965-4e16-8f79-fe0c7bba2fcd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்மாத முதற்பாதியுடன் ஒப்புநோக்க, இம்மாத பிற்பாதியில் குறைந்த அளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று ஆய்வு மையம் கூறியது. ஒரு சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் என உச்சத்தைத் தொடக்கூடும்.

ஒரு சில நாட்களில் இரவு வேளை சற்று வெப்பமாக இருக்கலாம்.

பெரும்பாலான நாட்களில் முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடையில் தீவின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.