ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் சிங்கப்பூரில் களைகட்டும் 'ஹெலோவின்'

1 mins read
ca597784-915f-4d44-82f7-546c7d391dbd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ஹெலோவின்' விழாவை முன்னிட்டு ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் சிங்கப்பூருக்கு வருபவர்களை மகிழ்விக்க குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்ற 'தி மினியன் மான்ஸ்டர்ஸ்' காத்துக் கொண்டிருக்கின்றன.

மினியன் கேலிச்சித்திரத்தில் பிரபலமான கதாமாந்தர்களைப் போல வேடமிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

செய்தியாளர்களுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறும்.