சுடச் சுடச் செய்திகள்

7.7% வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதிகள்

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.7 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக என்டர்

பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

புளூம்பர்க் ஆய்வில் தனியார் நிபுணர்கள் முன்னுரைத்த 3.3 விழுக்காட்டு வளர்ச்சியைவிட கடந்த மாதத்தின் வளர்ச்சி இரண்டு மடங்குக்கும் அதிகம்.

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆறில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஒரே மாதத்தில் மட்டும் அது வளர்ச்சி கண்டது.

மாதத்துக்கு மாத அடிப்படையில் கடந்த மாதம் சிங்கப்பூரில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 15.6 விழுக்காடு உயர்ந்தது. கடந்த ஜூலை மாதத்தில் அது 14.1 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon