அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி இயங்காது

அடுத்த மாதம் எல்லா ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் புக்­கிட் பாஞ்­சாங் எல்­ஆர்டி கட்­ட­மைப்பு மூடப்­படும் என்று அதனை நிர்­வ­கிக்­கும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது. தனது புதிய சமிக்ஞை முறை­யைச் சோதித்­துப் பார்க்­கும் பணி­க­ளுக்­காக இலகு ரயில்­கள் நிறுத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக அது குறிப்­பிட்­டது. 13 நிலை­யங்­களை உள்­ள­டக்­கிய புக்­கிட் பாஞ்­சாங் இலகு ரயில் தடம் அக்­டோ­பர் 4 முதல் அக்­டோ­பர் 25 வரை நான்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மூடப்­படும்.

புக்­கிட் பாஞ்­சாங் எல்­ஆர்டி போக்­கு­வ­ரத்து முறை நாள்­பட்­ட­தா­கி­விட்­ட­தால் அதனை ஒட்­டு­மொத்­த­மா­கப் புதுப்­பிக்­கும் பொருட்டு அதனை ஒரு பகு­தி­யாக சோத­னைப் பணி­களை 2018ஆம் ஆண்டு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அறி­வித்­தது.

பொம்­பார்­டி­யர் (சிங்­கப்­பூர்) என்­னும் நிறு­வ­னத்­துக்­கும் $344 மில்­லி­யன் பெறு­மான புதுப்­பிப்­புக் குத்­தகை வழங்­கப்­பட்­டது. 19 இலகு ரயில் வாக­னங்­களை புதி­ய­ன­வாக மாற்­று­வ­தும் அதில் அடங்­கும். 2024ஆம் ஆண்டுவாக்கில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!