சட்டவிரோத தேர்தல் விளம்பரம் வெளியிட்ட இணையத்தளத்திடம் போலிஸ் விசாரணை

பொதுத் தேர்­தல் நடை­பெற்ற கால­கட்­டத்­தில் பணம் பெற்­றுக்­கொண்டு சட்­ட­வி­ரோத விளம்­ப­ரங்­களை வெளி­யிட்­ட­தற்­காக ‘நியூ நாரட்­டிஃப்’ என்­னும் சமூக-பொரு­ளி­யல் இணை­யத்­த­ளத்­திற்கு எதி­ராக உதவி தேர்­தல் அதி­காரி போலி­சில் புகார் தெரி­வித்­துள்­ளார். தேர்­தல் துறை நேற்று இதனை அறிக்கை மூலம் தெரி­வித்­தது. அந்த விளம்­ப­ரங்­கள் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் சட்­டத்­தின்­கீழ் நடத்தை விதி­களை மீறிய செயல் என்­றும் அதில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. புகார் தெரி­விக்­கப்­பட்­டதை உறுதி செய்த போலிஸ் அது தொடர்­பான விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­கத் தெரி­வித்­தது.

‘நியூ நாரட்­டிஃப்’ பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்ட ஐந்து விளம்­ப­ரங்­களை அகற்­று­மாறு ஜூலை 3, ஜூலை 7 மற்­றும் ஜூலை 8 ஆகிய தேதி­களில் ‘ஃபேஸ்புக்’ சமூக ஊட­கத்தை உதவி தேர்­தல் அதி­காரி கேட்­டுக் கொண்­டி­ருந்­தார். அவை பணம் பெற்­றுக்­கொண்டு வெளி­யி­டப்­பட்ட, அனு­மதி வழங்­கப்­ப­டாத விளம்­ப­ரங்­கள் என்று தேர்­தல் துறை கூறி­யது. பொதுத் தேர்­தல் 2020க்கான பிர­சா­ரம் நடை­பெற்­றுக்­கொண்டு இருந்­தது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் சட்­டப்­படி எந்­த­வொரு தேர்­தல் நடத்­தைக்­கும் வேட்­பா­ளரோ அல்லது அவ­ரது முக­வரோ எழுத்து மூலம் அனு­மதி அளித்­தி­ருக்க வேண்­டும்.

“தேர்­தல் நடத்­தை­களில் ஈடு­பட ‘‘நியூ நாரட்­டிஃப்’ இணை­யத்­த­ளத்­திற்கோ அதன் பிர­தி­நி­திக்கோ அல்­லது அதன் முக­வ­ருக்கோ வேட்­பா­ளர் அல்­லது அவ­ரது முக­வர் இத்­தேர்­த­லின்­போது அனு­மதி எத­னை­யும் வழங்­க­வில்லை,” என்­றும் தேர்­தல் துறை தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!