400 ஆபாசப் படம்: இளையர் ஒப்புதல்

400 ஆபாசப் படம்: இளையர் ஒப்புதல்

1 mins read

டெலி­கி­ராம் சமூக ஊட­கத்­தின் எஸ்ஜி நாஸி லிமா என்­னும் குழு­வு­டன் தொடர்­பு­டைய இளை­யர் கடந்த ஆண்டு தம்­மி­டம் 400க்கும் மேற்­பட்ட ஆபா­சப் படங்­கள் இருந்­த­தாக ஒப்­புக்­கொண்­டார். ஜஸ்­டின் லீ ஹான் ஷி, 20, எனப்­படும் அவர் அந்­தக் குழு­வின் ஆபா­சப் பட வெளி­யீடு தொடர்­பில் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் கைது செய்­யப்­பட்ட நால்­வ­ரில் ஒரு­வர். குற்­றச் செயல் அம்­ப­ல­மான போது அந்­தக் குழு­வில் சுமார் 44,000 பேர் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் பெண்­களை ஆபா­ச­மா­கக் காட்­டும் புகைப்படங்­க­ளை­யும் காணொ­ளிப் படங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்ள அந்தக் குழு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது.