$124,000 போதைப்பொருள்கள் சிக்கின; 5 சிங்கப்பூரர்கள் உட்பட 8 பேர் கைது

$124,000 போதைப்பொருள்கள் சிக்கின; 5 சிங்கப்பூரர்கள் உட்பட 8 பேர் கைது

1 mins read
aae1b83d-cd76-439f-9c79-d5639db90fcd
பப்பாளிப் பழத்திற்குள் மறைக் கப்பட்ட போதைப்பொருட்கள். படம்: சிஎன்பி -

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் (சிஎன்பி) நேற்று முன்தினம் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் $124,000 மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்­கள் சிக்கின. இச்­சம்­ப­வம் தொடர்­பாக போதைப்­பொ­ருள் கடத்­திய சந்­தே­கத்­தின் பேரில் எட்டு ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர். அவர்­களில் ஐவர் சிங்­கப்­பூ­ரர்­கள், மூவர் மலே­சி­யர்­கள். இவர்­கள் எட்­டுப் பேரும் 18க்கும் 50க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்று சிஎன்பி குறிப்­பிட்­டது.

375 கிராம் 'ஐஸ்' போதைப்­பொ­ருள் 37 கிராம் 'ஹெரா­யின்', 135 கிராம் 'கெட்­ட­மைன்', ஐந்து 'எரி­மின்-5' மாத்­தி­ரை­கள் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். அன்று மாலை ரிவர் வேலி ரோட்டு அருகே இருந்த வாக­னம் ஒன்றை அதி­காரி கள் சோத­னை­யிட்­ட­போது 29 வய தும் 48 வய­தும் உடைய இரு சிங்­கப்­பூ­ரர்­கள் கைது செய்­யப்­பட்ட னர். அப்­போது அந்த வாக­னத்­துக்குள் இருந்த ஒரு பழக்­கூடை ஒன்­றில் இருந்த பப்­பா­ளிப் பழத்­தைச் சோதித்­த­போது அத­னுள் 333 கிராம் 'ஐஸ்', இரண்டு பொட்­ட­லங்­களில் சுருட்­டப்­பட்ட 121 கிராம் 'கெட்­ட­மைன்' ஆகி­யன மறைத்து வைக்­கப்­பட்டு இருந்­தன. இவை தவிர, வாக­னத்­திற்­குள் இருந்த போதைப்­பொ­ருட்­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

அச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து 18, 22 மற்­றும் 27 வய­து­க­ளு­டைய மூன்று மலே­சி­யர்­கள் பாசிர் பாஞ்­சாங் மொத்த விற்­பனை நிலை­யம் அருகே பிடி­பட்­ட­னர். அதே நாள் மாலை­யில் கிள­மெண்டி அவென்யூ 4ல் இரு­வர், புக்­கிட் பெர்மாயில் ஒரு­வர் என அடுத்­த­டுத்து மூன்று சிங்­கப்­பூ­ரர்­கள் பிடி­பட்­ட­னர்.