வேலை தேடுவோருக்கு பொங்கோலில் உதவி

பொங்­கோல் 21 சமூக மன்­றத்­துக்கு வெளியே வண்­ண­ம­ய­மான கப்­பல் கொள்­க­லன் ஒன்று வைக்கப்­பட்டு­உள்­ளது.

வேலை தேடி வரு­வோ­ருக்கு வேலை வாய்ப்­பு­க­ளைத் தேடித் தரும் மற்­றும் வேலை தொடர்­பான ஆலோ­சனை வழங்­கும் நிலை­ய­மாக அது செயல்­ப­டு­கிறது.

‘ஜாப் கொண்­டே­னர்’ என்று அழைக்­கப்­படும் அந்த நிலை­யத்தை பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத் தொகுதி மற்­றும் பொங்­கோல் வெஸ்ட் தனித்­தொ­குதி ஆகி­ய­வற்­றின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைத்­த­னர்.

வார இறு­தி­களில் திறந்­தி­ருக்­கும் அந்த நிலை­யத்­தில் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு, ‘ஸ்கில்ஸ் சென்­டர் வித் புரோ­ஜெக்ட் சக்­சஸ்’ அமைப்பு ஆகி­ய­வற்­றின் சேவை­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டி­ருக்­கும்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் வேலை தொடர்­பான தங்­கள் விருப்பங்­கள் பற்றி மனம் விட்டுப் பேச, ‘ஜாப் கொண்­டே­னர்’ நிலை­யம் ஓர் உகந்த இடம் என்­றார் பொங்­கோல் ஷோர் வட்­டா­ரத்தை மேற்­பார்­வை­யி­டும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி இயோ வான் லிங்.

“வேலை­யின்­மை­யும் ஆட்­கு­றைப்­பும் பேசு­வ­தற்கு மிக­வும் சர்ச்­சை­யான விவ­கா­ரங்­கள். இதன் கார­ண­மா­கத்­தான் மக்­கள் மனந்­தி­றந்து பேசு­வ­தற்கு ஒரு சிறந்த இடத்தை அமைத்­துக் கொடுப்­பது முக்­கி­யம் எனக் கரு­தி­னோம்,” என்­றார் திரு­வாட்டி இயோ.

பொங்­கோல் ஷோர் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள சமூக மன்­றத்­தில் நடை­பெ­றும் வேலைச் சந்­தை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார் திரு­வாட்டி இயோ.

இந்த ஒரு நாள் வேலைச் சந்­தை­யில், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, உணவு, பானம் ஆகிய துறை­களில் உள்ள கிட்­டத்­தட்ட 1,000 வேலை­கள் வழங்­கப்­பட்­டன.

“கொவிட்-19 நில­வ­ரத்­தால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட விமா­னத்­து­றை­யி­லும் இதர தொழில்­து­றை­க­ளி­லும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் வேலை செய்­கி­றார்­கள். ஆகவே, இது­போன்ற வேலைச் சந்­தை­கள் குடி­யி­ருப்­பா­ளர்­களை இன்­னும் நெருக்­க­மா­கக் கொண்டு வரு­வ­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு நாம் உத­வ­வும் வாய்ப்­ப­ளிக்­கிறது,” என்­றார் பாசிர் ரிஸ் ஈஸ்ட் வட்­டா­ரத்­துக்­குப் பொறுப்பு வகிக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஷாரி­யல் தாஹா.

திரு­வாட்டி இயோ, திரு ஷாரி­யல் தாஹா இரு­வ­ரு­டன் சேர்ந்து மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், உள்­துறை மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான், கல்வி மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் ஆகி­யோர் இணைந்து புதிய ‘ஜாப் கொண்­டே­னர்’ வேலை ஆலோ­சனை நிலை­யத்­தைத் திறந்து வைத்­த­னர்.

வரும் நவம்­பர் மாதத்­தில், திரு­வாட்டி இயோ­வின் பொங்­கோல் ஷோர் வட்­டா­ரம், தன்­னு­ரிமை பணியாளர்க­ளுக்கு PS Lvbang எனும் வழி­காட்டி தளத்தை தொடங்­க­வி­ருக்­கிறது.

அதன் மூலம் தன்­னு­ரிமை தொழி­லா­ளர்­கள் தங்­கள் சேவை­களைக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் விளம்­ப­ரப்­ப­டுத்­த­லாம். அது தொடர்­பான மேல் விவ­ரங்­கள் அடுத்த மாதம் வெளி­யி­டப்­படும்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு பணி­யிடை மாற்­றம் செய்ய விரும்­பும் ஒன் பொங்­கோல் குடி­யி­ருப்­பா­ள­ரான 45 வயது திரு­வாட்டி ஆங் அய் லியான், ஓராண்­டுக்கு முன் தாம் பார்த்த கணக்­கி­யல் வேலை­யி­லி­ருந்து ஓய்வு எடுக்க நினைத்­தார். அதன் பிறகு அவர் சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்­கில் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு உத­வும் செயல்­பாட்டு ஆத­ரவு உத­வி­யா­ள­ராக தொண்­டூ­ழி­யம் புரிந்­தார்.

“அந்த வேலை­யில் நான் மிகுந்த திருப்­தி­ய­டைந்­ததை பிறகு உணர்ந்­தேன். முத­லில், ஒரு வேலை­யைச் செய்ய உங்­கள் மனம் விரும்­பும். ஆனால் அதில் உங்­க­ளுக்கு அனு­ப­வம் இல்லை என்­ப­தால், அதை செய்ய நீங்­கள் தயங்­கு­வீர்­கள்.

“ஆனால் இப்போது, அது எனக்குப் பிடித்த வேலையாகி விட்டது. அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்,” என்றும் கூறினார் திருவாட்டி ஆங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!